India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் சென்டர் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது என்றார். மேலும், புற்றுநோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், அரசு சார்பில் மாநிலம் முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் சென்டர் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்திய பங்குச்சந்தையில் டாப் 10 நிறுவனங்களின் மதிப்பு கடந்த வாரம் ₹2,55,995 கோடி சரிந்துள்ளது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ₹1,32,061.4 கோடி சரிந்து, ₹6,65,441.16 கோடியாகவுள்ளது. TCS மதிப்பு ₹31,164.6 கோடியும், ITC மதிப்பு ₹23,932.94 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பு ₹17,091.72 கோடியும், மாருதி சுசுகி இந்தியாவின் மதிப்பு ₹13,821.67 கோடியும் ஒரே வாரத்தில் சரிந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாய், மாடு போன்ற பிராணிகள், மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வேடச்சந்தூரில் சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர், காயமடைந்தனர். இதனிடையே நாய், மாடுகள் தாக்கும் பிரச்னைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குவைத் தீ விபத்தில், இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த மேத்யூ, அப்பாஸியா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்நிலையில், அவர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மேத்யூ, அவரது மனைவி, 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். சில மாதங்களுக்குமுன் குவைத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்து பேசினால் பாஜகவின் “B” டீம் என சொல்கின்றனர்; நாங்கள் பாஜகவிற்கு எப்போதும் நேர் எதிரானவர்கள் என்று பா.ரஞ்சித் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒருநாள் என் மக்கள் அனைவரும் ஒன்று திரள்வர் எனக் கூறிய அவர், ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இல்லையென்றால், காவல்துறைக்கு நிர்பந்தத்தை உருவாக்குவோம் என எச்சரித்துள்ளார்.

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஜோடிக்கு திரைப் பிரபலங்கள் அளித்த பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஷாருக் கான் ₹40 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டை கொடுத்துள்ளதாக தெரிகிறது. பச்சன் குடும்பம் ₹30 கோடி மதிப்பிலான நெக்லஸை பரிசளித்ததாகவும், சல்மான் கான் ₹15 கோடி மதிப்பிலான பைக்கும், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி ₹9 கோடி மதிப்பிலான பென்ஸ் காரையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்வீடனில் ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், குரோசியாவின் டுஜே அஜ்டுகோவிச்சை எதிர் கொண்டார். முதல் செட்டை டுஜே 6-4 என கைப்பற்றிய நிலையில், 2ஆவது செட்டை 6-3 என நடால் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இறுதியில் நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நடப்பு கல்வி ஆண்டில், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் (சைக்கிள்) வழங்கும் திட்டத்தை இன்று சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, வரும் திங்கள் கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கள் வழங்கப்படவுள்ளன.

உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 2ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3ஆவது சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதை தொடர்ந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.