News November 10, 2025

SA உடனான இந்தியாவின் மோசமான ரெக்கார்ட்

image

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி உள்ளநிலையில், அந்த அணி உடனான இந்திய அணியின் கடந்த கால ரெக்கார்ட்கள் கவலையை கொடுக்கின்றனர். இதுவரை இரு அணிகளும் 16 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளனர். அதில் 8 முறை தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. 4 முறை மட்டுமே இந்திய அணி வென்ற நிலையில், 4 தொடர் டிராவில் முடிந்துள்ளது.

News November 10, 2025

நவம்பர் 10: வரலாற்றில் இன்று

image

*1910 – எழுத்தாளர் சாண்டில்யன் பிறந்தநாள். *1958 – நடிகர் ஆனந்தராஜ் பிறந்தநாள். *1975 – கவிஞர் தாமரை பிறந்தநாள். *1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது. *1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் PM நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. *2019 – இந்திய தேர்தலில் சீர்திருத்தம் மேற்கொண்ட முன்னாள் ஐஏஎஸ் டி.என்.சேஷன் காலமானார்.

News November 10, 2025

பாமகவுடன் நூதன டீலிங்கை தொடங்கிய அதிமுக கூட்டணி

image

அன்புமணி – ராமதாஸ் என்ற இருதரப்பினருடன் பாஜக- அதிமுக கூட்டணி நூதனமான டீலிங் பேசிவருகிறதாம். அன்புமணி தரப்புடன் பாஜகவும், ராமதாஸ் தரப்புடன் ஆத்தூர் இளங்கோ மூலமாக EPS-ம் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறாராம். அன்புமணி 15 தொகுதிகள் + 1 ராஜ்யசபா கேட்கும் நிலையில், அதைவிட குறைவாக ராமதாஸ் ஒத்துக்கொள்ள மாட்டார் என்கின்றனர். அதேபோல், எந்த அணி ராஜ்யசபா சீட்டை கைப்பற்றும் என்ற போட்டியும் எழுந்துள்ளதாம்.

News November 10, 2025

National Roundup: ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய கட்சி

image

*அங்கோலா சென்றுள்ள ஜனாதிபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. *பிஹாரில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. நாளை 2-ம் கட்ட தேர்தல். *டெல்லியில் காற்று மாசுபாடுக்கு எதிராக போராடியவர்கள் கைது. *ம.பி.யில் கட்சி நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்காக ராகுல் காந்திக்கு 10 Push-Ups தண்டனை வழங்கப்பட்டது. *மெஹுல் சோக்சியின் ₹46 கோடி சொத்துக்களை ஏலம் விட கோர்ட் ஒப்புதல்.

News November 10, 2025

2026 IPL ஏலம் எப்போது? வெளியான தகவல்

image

2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம், வரும் டிச.,15-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளில் ஏலம் நடந்த நிலையில், நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்த நகரத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், 10 அணிகளும் தக்க வைக்கப்படும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வரும் 15-ம் தேதிக்குள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 10, 2025

பில் கேட்ஸ் பொன்மொழிகள்

image

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *கடினமான வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி அதைச் செய்ய ஒரு எளிதான வழியைக் கண்டுபிடிப்பார். *நீங்கள் பெரும்பாலும் உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும்.

News November 10, 2025

இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட், சேது சூப்பர்ஃபாஸ்ட், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து மட்டுமே புறப்படும், எழும்பூர் செல்லாது. அதேபோல், அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம், எழும்பூர் வழியாக இயங்காது.

News November 10, 2025

விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

image

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

News November 10, 2025

அண்ணாமலையின் ஃபிட்னஸ்.. வாழ்த்திய PM மோடி

image

கோவாவில் நடைபெற்ற ‘அயர்ன்மேன் 70.3’ டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்த அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவை PM மோடி வாழ்த்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டிரையத்லானில் 1.8 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிளிங், 21.1 கி.மீ., ரன்னிங் செய்ய வேண்டும்.

error: Content is protected !!