India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு 2ஆவது அணியாக முன்னேறும். அதே சமயம், சென்னை அணியும் வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. யார் வெற்றி பெறுவார்?
மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் – ஆற்காடு சாலையை முன்னறிவிப்பின்றி மூடி வேலை செய்வதாக, மெட்ரோ பணியாளர்களிடம் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், மெட்ரோ ஊழியரை அவதூறான வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் குற்றம்சாட்டியுள்ளார். ஒடிஷாவில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்கள் கூட நவீன் பட்நாயக்கின் நினைவில் இருக்காது என மோடி கிண்டல் செய்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்துள்ள நவீன் பட்நாயக், ஒடிஷா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் எலுமிச்சை பழங்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. ₹2,000 – ₹2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை தற்போது ₹8,000க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பழத்தின் விலை ₹6 முதல் ₹10 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் மேலும் 2 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி மீண்டவர்கள் மத்தியில், அதன் பக்கவிளைவாக பல்வேறு உடல்நல பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக நாள்பட்ட சோர்வு, உலகளவில் அலையாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கொரோனா பாதித்ததன் விளைவாக நாள்பட்ட சோர்வு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு வேளை மாதக்கணக்கில் உடல் சோர்வு தொடரும்பட்சத்தில் மருத்துவரை அணுகலாம்.
CSK-RR இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை காண, ராஜஸ்தான் ரசிகர் ஒருவர் தர்பூசணி பழத்துடன் மைதானத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பழத்தில் ராஜஸ்தான் வீரர்களான சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஷ்வின், யுவேந்திர சஹல் ஆகியோரது முகங்களை தத்ரூபமாக வரைந்து கொண்டு வந்துள்ளார். சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துமா ராஜஸ்தான்?
ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். ‘மோங்கீ’ என பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன், அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழைப்பழம், இந்திய மதிப்பில் ₹362க்கு விற்பனையாகிறது. மிகக் குளிர்ந்த பிரதேங்களில் விளைவதால், இந்த பழங்களுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதில்லை.
▶ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’, ▶வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், பரத் நடித்துள்ள ‘தலைமை செயலகம்’ ஆகிய 2 திரைப்படங்களும் வரும் மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே நாளில், ▶தமிழ் இயக்கத்தில் உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலெக்ஷன்’ (ஜீ) மற்றும் சாண்டி, கௌரி, கலையரசன், அபிராமி, ஜனனி ஐயர் நடித்த ‘ஹாட்ஸ்பாட்’ (ஆஹா) OTT தளங்களில் வெளியாகிறது.
‘I.N.D.I.A’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழைகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மோடி ராமர் கோயிலை மட்டுமல்ல, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாத் வழித்தடத்தையும் கட்டியுள்ளதாக, மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதாகவும், ஆனால், பாஜகவுக்கு எதைக் கண்டும் பயமில்லை எனவும் கூறினார். காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.