India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வுக்கு முதலில் 1,768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அண்மையில் கூடுதலாக 1,000 இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இத்தேர்வை 26,510 பேர் எழுத உள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதை சுட்டிக்காட்டி காவிரி பிரச்னைக்கு ஏன் தீர்வு காணவில்லை என அக்கட்சி எம்பி சசிகாந்த் செந்திலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்பதால், மத்திய அரசே தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய பாஜக ஆட்சியில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10 மணியளவில் இப்போராட்டம் நடக்கிறது. அத்துடன், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பாலிவுட் சினிமா, தற்போது பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தென்னிந்திய திரைப்படங்களில் வளர்ச்சிதான் அதற்கு முக்கிய காரணம் என்று பலரும் கூறுகின்றனர். குறிப்பாக பாகுபலி, கே.ஜி.எஃப், RRR, விக்ரம், PS, கல்கி என்று பாலிவுட் ரசிகர்களை தங்கள் வசம் கவர்ந்து, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. இவையெல்லாம் பாலிவுட்டின் தடுமாற்றத்தையே காட்டுகிறது.

தினமும் க்ரீன் டீ குடிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. வாய் புற்றுநோய், வயிறு, கனையம், மார்பக புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களை தடுப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டீ குடிக்கும் பழக்கம் இல்லாதோரை விட க்ரீன் டீ குடிக்கும் நபர்களின் உடல்நிலை சிறப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 5 கப் வரை குடிக்கலாம் என்று சொல்கின்றனர்.

பழனி கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரும்நிலையில் ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம், பழனி மலை மீதிருப்பது முருகன் இல்லை, சித்தரான போகரே எனக் கூறியுள்ளார். இந்து மதத்தினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்த இதுபோல அவர் பேசுவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கவே சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து, குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என சுகி சிவம் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23இல் தாக்கல் செய்கிறார். இதையொட்டி, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பிகைக்குரிய புனித நாளாக கருதப்படும் ஆடி பௌர்ணமியில் (ஜூலை 21), கௌமாரியை வழிபாடு செய்பவர் வாழ்வில், முன்னேற்றம் ஏற்படுமென சக்தி புராணம் கூறுகிறது. காலையிலேயே நீராடி, வீட்டை சுத்தம் செய்து, கோலமிட்டு, வேப்பிலை கட்டி, தூபமிட்டு, விரதமிருந்து கோயிலுக்கு சென்று, கௌமாரிக்கு கரு ஊமத்தைப்பூ மாலை சாற்றி, நெய் தீபமிட்டு, மூங்கில் அரிசி பாயசம் படைத்து வணங்கினால் குறையாத செல்வம் கிட்டும் என்பது ஐதீகம்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பாண்டிக்காடு மற்றும் சிறுவனின் பள்ளி உள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவைத் தேர்தலில் தங்கள் மாவட்டத்தில் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டி, முக்குலத்தோர் வாக்கு கிடைக்காததே இதற்கு காரணம் என அவர்கள் சொன்னதாகவும், ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை கட்சியில் இணைப்பது நல்லது என்று கொந்தளித்ததாகவும் தெரிகிறது. இதை கேட்ட இபிஎஸ், ஆர்பி உதயகுமார் மூலம் சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.