India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘G.O.A.T’ திரைப்படம் செப்.5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 3ஆவது வாரத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடைபெறும் முதல் இசை வெளியீட்டு விழா என்பதால், அவரது குட்டி ஸ்டோரி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

UAE அணிக்கு எதிரான T20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பை T20 தொடரில் குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள IND அணி, இன்று UAE அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய IND அணி, 201 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 66, ரிச்சா கோஸ் 64 ரன்கள் குவித்தனர். 202 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய UAE, 123/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக பேச்சு அடிபடும் நிலையில், அதனை மூத்தவரான துரைமுருகனுக்கு அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அப்படி கிடைத்தால் ஏற்பீர்களா என்று துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “துணை முதல்வர் பதவியை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால், அது பலர் கூடி எடுக்க வேண்டிய முடிவு” என்றார்.

கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பரவிவரும் சூழலில், தமிழகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை உடனடியாக பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து நோயாளிகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவிவரும் சூழலில், மக்கள் விழிப்புடன் இருக்க தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்கள், பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் 21 நாள் தனிமையில் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வவ்வால் மூலம் நிஃபா வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய பீர் திருவிழா சீனாவின் கிங்டாவ் நகரில் தொடங்கியது. பல நாடுகளில் இருந்து சுமார் 2,200 பீர் வகைகள் இந்த திருவிழாவில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஆடல், பாடல், இசை என பல வகையான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காகவும், உள்ளூர் பீர் உற்பத்தியாளர்களின் வருவாயை பெருக்குவதற்காகவும் இத்திருவிழா நடத்தப்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் 10% க்கும் அதிகமானோர் 60+ வயதான மூத்த குடிமக்களாவர். சமூகத்தில் உள்ள மற்ற பிரிவினருடன் ஒப்பிடுகையில், அவர்களுக்கு அரசின் உதவியும் வழிகாட்டுதலும் அதிகம் தேவைப்படுகிறது. மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டில் அவர்களுக்கான இன்ஷூரன்ஸ், வங்கி வைப்புத் தொகை வட்டி, வரி விலக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்தி, சில மாற்றங்களைச் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலுதவி செய்த சிறை மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோழியின் ஒரு முட்டையில் மட்டும் சுமார் 150 கலோரிகள் இருக்கின்றன. இதில், வெள்ளைக்கருவில் 50 கலோரிகளும் மஞ்சள் கருவில் 100 கலோரிகளும் உள்ளன. எனவே, முட்டை மனிதர்களுக்கு மிகவும் போஷாக்கு மிகுந்த உணவாக இருக்கிறது. வாத்து முட்டையில் சுமார் 185 கலோரிகள் இருக்கின்றன. மனிதன் உயிர்வாழ சராசரியாக ஆணுக்கு நாளொன்றுக்கு 2000 கலோரிகளும் பெண்ணுக்கு 1600 கலோரிகளும் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.