India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியில் பாஜக கூட்டணி அரசு மீண்டும் அமைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மீட்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக மீட்டெடுக்கும் என்றும் கூறினார்.
திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏந்தல் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது கார் மீது, மற்றொரு கார் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ஏ.வ.வேலுவின் மகன் கம்பன், லேசான காயமடைந்த நிலையில், கார் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எவரெஸ்ட் சிகரம் மீது 29ஆவது முறையாக ஏறி, நேபாள மலையேற்ற வீரர் காமி ரிதா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். கடல்மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் அடி உயரத்தில் உள்ள அந்த சிகரமே, உலகின் மிகப்பெரிய மலை சிகரம். அதன்மீது 28 முறை ஏறி, காமி ரிதா சாதனை படைத்திருந்தார். இதனால் அவர், “எவரெஸ்ட் மனிதர்” என்ற புனைப் பெயரில் அழைக்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் மீண்டும் 2ஆவது முறையாக ஏறியுள்ளார்.
நாட்டு மக்களே தனது வாரிசுகள் என்று மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டு மக்கள்தான் தமது வாரிசுகள் என்றும், இந்த உலகத்தில் அவர்களை தவிர தனக்கு வேறு யாருமில்லை என்றும் கூறினார். குடும்பத் தலைவர் தனது வாரிசுகளுக்கு சொத்தை விட்டுச் செல்வது போல, நல்ல வளர்ச்சியடைந்த இந்தியாவை தனது வாரிசுகளான மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
கேரளாவை வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. 1937ஆம் ஆண்டு உகாண்டாவின் வெஸ்ட் நைல் என்ற மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல. 2011ஆம் ஆண்டே கேரளாவில் இந்த வைரஸ் காய்ச்சல் பதிவாகியுள்ளது. 2019இல் ஒரு சிறுவன் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தார். வேலூரில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வைரஸ் காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் மே 13-19 வரை உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், வீட்டுப் பாடம், சிறப்பு வகுப்பு போன்றவற்றால் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்து, கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படுவதாகவும், இதனால் அவர்களின் கல்வி வளர்ச்சி வெகுவாக பாதிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
INDIA கூட்டணி அரசு அமைந்ததும், சீனா ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய நிலப்பகுதி அனைத்தும் மீட்கப்படும் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த கெஜ்ரிவால், இந்திய நிலப்பகுதிகளை சீனா அதிக அளவில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், ஆனால், இந்த உண்மையை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு ஒப்புக் கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரை தீவிரமாக கண்காணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். “க்யூலக்ஸ்” வகை கொசுக்களால் கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறிய அவர், மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாகவும், வீடுகளை ஒட்டி தேங்கிக் கிடக்கும் தண்ணீரை உடனே அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
10 மாதம் வயிற்றில் சுமந்து ஈன்ற தாயே கண்கண்ட தெய்வம் என்றால் மறுப்பதற்கில்லை. இதனாலேயே நாம் வணங்க வேண்டிய பட்டியலில் தாயை முதன்மைபடுத்தியுள்ளனர். தாய்மையைக் கொண்டாடும் வகையில், அன்னையர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறு பிள்ளைகளாக இருந்தபோது நமக்கு பிடித்தவற்றை வாங்கியளித்த அந்த தெய்வங்களுக்கு, இன்று அவர்களுக்கு பிடித்தவற்றை கொடுத்து நாம் ஆச்சரியபடுத்தலாமே.
மோடி ‘Road’ ஷோ நடத்தும்போது, தாங்கள் ‘Job’ ஷோ நடத்துவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவை கிராம மக்கள் தூக்கி எறிந்துள்ளதாகக் கூறிய அவர், போதிய வரவேற்பு இல்லாததால் பிரதமரின் பயணத் திட்டம் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். பிஹாருக்கு 10 முறை வந்த மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறார் என்பதை ஒருமுறை கூட கூறவில்லை என அவர் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.