India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிக் குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் மே 13-19 வரை உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், வீட்டுப் பாடம், சிறப்பு வகுப்பு போன்றவற்றால் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்து, கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படுவதாகவும், இதனால் அவர்களின் கல்வி வளர்ச்சி வெகுவாக பாதிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
INDIA கூட்டணி அரசு அமைந்ததும், சீனா ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய நிலப்பகுதி அனைத்தும் மீட்கப்படும் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த கெஜ்ரிவால், இந்திய நிலப்பகுதிகளை சீனா அதிக அளவில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், ஆனால், இந்த உண்மையை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு ஒப்புக் கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரை தீவிரமாக கண்காணிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். “க்யூலக்ஸ்” வகை கொசுக்களால் கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கூறிய அவர், மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாகவும், வீடுகளை ஒட்டி தேங்கிக் கிடக்கும் தண்ணீரை உடனே அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
10 மாதம் வயிற்றில் சுமந்து ஈன்ற தாயே கண்கண்ட தெய்வம் என்றால் மறுப்பதற்கில்லை. இதனாலேயே நாம் வணங்க வேண்டிய பட்டியலில் தாயை முதன்மைபடுத்தியுள்ளனர். தாய்மையைக் கொண்டாடும் வகையில், அன்னையர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சிறு பிள்ளைகளாக இருந்தபோது நமக்கு பிடித்தவற்றை வாங்கியளித்த அந்த தெய்வங்களுக்கு, இன்று அவர்களுக்கு பிடித்தவற்றை கொடுத்து நாம் ஆச்சரியபடுத்தலாமே.
மோடி ‘Road’ ஷோ நடத்தும்போது, தாங்கள் ‘Job’ ஷோ நடத்துவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவை கிராம மக்கள் தூக்கி எறிந்துள்ளதாகக் கூறிய அவர், போதிய வரவேற்பு இல்லாததால் பிரதமரின் பயணத் திட்டம் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். பிஹாருக்கு 10 முறை வந்த மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறார் என்பதை ஒருமுறை கூட கூறவில்லை என அவர் விமர்சித்தார்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், (Assistant Surgeon) உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான 2,553 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ₹56,100- ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி இன்றி களமிறங்க உள்ளது. நேற்று முன்தினம் குஜராத்துக்கு எதிரான போட்டியை முடித்து விட்டு, CSK அணி இன்று காலை தான் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. வந்த கையோடு மைதானத்திற்கு திரும்பிய சென்னை அணி, சில மணி நேர பயிற்சியை மட்டுமே மேற்கொண்டு இன்றைய போட்டியை எதிர்கொள்ள உள்ளது. பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை வீழ்த்துமா CSK?
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர காவல்துறை குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது, வீட்டில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம், சென்னை மாநகர போலீசார் வழங்கியுள்ளனர்.
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு, அனைவரும் மைதானத்தில் காத்திருக்கும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த CSK நிர்வாகம், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று சஸ்பென்ஸ் உடன் தெரிவித்துள்ளது. அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மோடிதான் மீண்டும் பிரதமராவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியபோது, சிறையில் இருந்து வெளிவந்த கெஜ்ரிவால், ஊடகத்தில் செய்தி வருவதற்காக அமித் ஷா பிரதமராவார் எனக் கூறுவதாகவும், அதனால், அவரது கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்றும், மோடிதான் எப்போதும் பிரதமர் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.