News July 22, 2024

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?

image

பொருளாதார ஆய்வறிக்கை என்பது நிதி அமைச்சகத்தின் முதன்மையான வருடாந்தர ஆவணமாகும். தொழில்துறை, விவசாயம், உற்பத்தி போன்ற அனைத்து துறை சேவைகளின் விரிவான புள்ளிவிவரத் தரவை வழங்குவதன் மூலம் கடந்த நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை இது மதிப்பாய்வு செய்கிறது. தவிர, கடந்தாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த மேக்ரோ பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்து அடுத்த நிதியாண்டிற்கான மதிப்பீட்டை வழங்குகிறது.

News July 22, 2024

பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பது யார்?

image

பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாளில் மத்திய நிதியமைச்சரால் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறையிலுள்ள பொருளாதார பிரிவு தயாரிக்கும். அதை நிதித்துறை செயலாளர் ஆய்வு செய்யும். பிறகு நிதியமைச்சகம் இறுதி ஒப்புதல் அளிக்கும். இந்த அறிக்கையை தயாரிக்கும் முழு பொறுப்பும் தலைமை பொருளாதார ஆலோசகரை சேரும்.

News July 22, 2024

பொருளாதார ஆய்வறிக்கைக்கு ஏன் முக்கியத்துவம்?

image

கொள்கை முடிவை வழிநடத்துதல், பொருளாதார உத்தியை வடிவமைத்தலில் பொருளாதார ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இது பொருளாதாரம் குறித்த பாரபட்சமற்ற மதிப்பீட்டை வழங்கி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது. பொறுப்புணர்வை உறுதி செய்வதுடன், டிரெண்டிங் குறித்து முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் அறிய உதவுகிறது. பொருளாதார செயல்பாட்டை மதிப்பிட, இலக்கை அமைக்க அளவுகோலாகிறது.

News July 22, 2024

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை: ஐகோர்ட் உத்தரவு

image

சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் மது விற்க அனுமதி கோரிய வழக்கில், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் சில குறிப்பிட்ட மதுபானங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது குறித்தும், ஜூலை 29ஆம் தேதி பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News July 22, 2024

தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்

image

• பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா• 90 ஆண்டுகள் பழமையான விமான திருத்த மசோதா• நிதி மசோதா-2024 உள்ளிட்ட 6 புதிய மசோதாக்கள் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இது தவிர,
• வங்கிகள் ஒழுங்கு முறைச்சட்டம்-1949, • வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்)
சட்டம்-1970 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டுவந்து நிறைவேற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News July 22, 2024

நாளை முதல் “டிமான்டி காலனி 2” சர்ப்ரைஸ் அப்டேட்

image

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள “டிமான்டி காலனி 2” படத்தின் அப்டேட் நாளை முதல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், ரசிகர்களை காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும், சர்ப்ரைஸ் தரும் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News July 22, 2024

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி திட்டம் தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதியை உடனே வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் வகையில், தமிழகத்தில் முதல்முறையாக இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 2,500 சதுர அடி வரை கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். கட்டடப் பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்றும் பெற வேண்டியதில்லை. உடனடியாக அனுமதி பெற <>கிளிக்<<>> செய்க.

News July 22, 2024

நாட்டிற்கு எதிர்மறை அரசியல் தேவையில்லை: மோடி

image

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியதையொட்டி, டெல்லியில் பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது அவர், எதிர்க்கட்சிகள் சித்தாந்தங்களில் தவறு இல்லை என்றும், ஆனால் அதில் எதிர்மறை எண்ணங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் கடந்தகால கசப்புகளை மறந்துவிட்டு அரசுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

News July 22, 2024

பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பது யார்?

image

பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாளில் மத்திய நிதியமைச்சரால் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறையிலுள்ள பொருளாதார பிரிவு தயாரிக்கும். அதை நிதித்துறை செயலாளர் ஆய்வு செய்யும். பிறகு நிதியமைச்சகம் இறுதி ஒப்புதல் அளிக்கும். இந்த அறிக்கையை தயாரிக்கும் முழு பொறுப்பும் தலைமை பொருளாதார ஆலோசகரை சேரும்.

News July 22, 2024

நீட் அவசியம் என நீதிமன்றமே கூறியுள்ளது: தர்மேந்திர பிரதான்

image

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஆதாரம் இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு நீட் முறைகேடு புகார் தொடர்பான வழக்கு நடைபெறுவதாகவும், நீட் அவசியம் என உச்சநீதிமன்றம் இரண்டு முறை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நீட் முறைகேடு விவகாரம் குறித்து திமுக எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பிய நிலையில், அவர் விளக்கமளித்தார்.

error: Content is protected !!