India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு ஏணி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். இக்கட்சியின் சார்பில் நவாஸ் கனி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அகில இந்திய கட்சியான IUML, கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திமுகவிடம் கூறியிருந்தது. அதன்படி, தற்போது ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
திமுகவில் குடும்பத்தினருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுபோல விமர்சித்துவிட்டு, தருமபுரியில் பாமக தனது வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியாவை நிறுத்தியுள்ளது. விருதுநகரில் பாஜக தனது வேட்பாளராக சரத்குமார் மனைவி ராதிகாவை நிறுத்தியுள்ளது. விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனை தேமுதிக களமிறக்கியுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. கடந்த 16 வருட ஐபிஎல் வரலாற்றில், சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. கடைசியாக 2008இல் ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி தான் சென்னையை வீழ்த்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது தேர்தல் ஆணையம். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தபால் வாக்கு செலுத்தும் முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் விவரிக்கப்படவுள்ளது.
அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ஆம் தேதியே நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “அதிமுகவின் சின்னம் மற்றும் கொடி பறிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மத்திய தொகுதியில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். காலை 8.30 மணியளவில் திறந்த வாகனம் மூலம் பிரசாரத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தின் ஐயா தெரு, பஜார் தெரு ஆகிய சந்திப்புகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தமிழ்நாட்டில் 2 ஐஎஸ் தீவிரவாதிகளும் வாங்கினார்களா என சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டுவைத்த 2 தீவிரவாதிகளும், சென்னையில் தங்கியிருந்ததும், பிறகு பெங்களூரு வந்து குண்டுவைத்ததும் தெரிய வந்துள்ளது. இதைவைத்து, 2 பேரும் தமிழ்நாட்டில் வெடிகுண்டுகளை வாங்கினார்களா சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளரை பாமக தனியாக அறிவித்துள்ளது. மொத்தம் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9ஐ நேற்று காலை பாமக தலைமை அறிவித்தது. பின்னர், மாலையில் தர்மபுரி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இரவில் காஞ்சிபுரம் வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், பாமக வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடியும் வரை நடிகர் சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.26, மே 7 என 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஷிவமோகா தொகுதியில் சிவராஜ் குமாரின் மனைவி கீதா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சமீபத்தில் அவருக்கு ஆதரவாக சிவராஜ் குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 ஐஎஸ் தீவிரவாதிகளும், சென்னையில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் தொப்பி அணிந்து நடமாடிய 2 தீவிரவாதிகளும், கர்நாடகத்தை சேர்ந்த ஷாகிப், தாஹா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொப்பியின் சீரியல் நம்பரை ஆய்வு செய்ததில், திருவல்லிகேணியில் அதை வாங்கியதும், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் அவர்கள் அங்கு தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.