News November 10, 2025

மாணவர்களுக்கு மாதம் ₹10,000 ஊக்கத்தொகை

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை அரசு உயர்த்தியுள்ளது. முழுநேரமாக பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊக்கத் தொகை 4,000-ல் இருந்து 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கான தொகை 5,000 ஆக (முன்பு 2,000) அதிகரிக்கப்பட்டுள்ளது. <>https://hrce.tn.gov.in<<>> இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம். SHARE IT.

News November 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 10, ஐப்பசி 24 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம். ▶சிறப்பு: முகூர்த்த நாள், திங்கள் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: நெய் தீபம் ஏற்றி வராகி அம்மனை வழிபடுதல்.

News November 10, 2025

டி20 உலகக்கோப்பை இங்கு தான் நடைபெறுகிறதா?

image

ICC டி20 உலகக்கோப்பை நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் இலங்கையில் உள்ள கொழும்பு, கண்டி மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. செமிஃபைனல் அகமதாபாத், கொல்கத்தாவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இலங்கை (அ) பாகிஸ்தான் தேர்வானால், பைனல் இலங்கையில் நடைபெறும்.

News November 10, 2025

International Roundup: சூடானில் தொடரும் படுகொலைகள்

image

*கல்மேகி புயலை தொடர்ந்து ஃபங் வாங் புயல் பிலிப்பைன்ஸை தாக்கியது. *2014-ல் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்தது. *சூடானில் படுகொலைகள் தொடர்ந்து வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை. *டிரம்ப் ஆவணப்பட சர்ச்சை தொடர்பாக BBC தலைமை இயக்குநர், BBC News CEO பதவி விலகினர். *மக்களுக்கு முழு உணவு பலன்களை வழங்குவதை உடனே நிறுத்த அனைத்து மாகாண அரசுகளுக்கும் டிரம்ப் நிர்வாகம் உத்தரவு.

News November 10, 2025

மகளின் வெற்றி.. அப்பாவுக்கு போலீஸ் வேலை

image

இந்திய மகளிர் அணி வீராங்கனை கிராந்தி கவுடுக்கு ம.பி. அரசு ₹1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதேபோல், போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது தந்தை முன்னா சிங்கை, மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் பணிகளின் போது தவறு நிகழ்ந்ததாக கடந்த 2012-ல் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தனது அப்பாவை மீண்டும் போலீஸ் உடையில் பார்ப்பதே தனது லட்சியம் என கிராந்தி தெரிவித்து இருந்தார்.

News November 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

News November 10, 2025

மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டில் சிக்குவார்கள்: ராகுல்

image

மோடியும், அமித் ஷாவும் ஒருபோதும் நியாமான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். EC ஆணையருக்கும் வாக்கு திருட்டில் தொடர்புள்ளதாகவும், மோடியும், அமித்ஷாவும் வாக்கு திருட்டு விவகாரத்தில் இருந்து தப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பல மாநிலத்தில் வாக்குதிருட்டின் மூலம் வெற்றிபெற்ற பாஜக, பிஹாரிலும் அதேபோன்று வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக கூறினார்.

News November 10, 2025

வெள்ளை முடி இருக்கா? அப்போ நல்லது தான்!

image

தலைமுடி நரைப்பதும் ஒருவகையில் நல்லது என்கின்றனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். கேன்சரை உண்டாக்கும் செல்களை உடல் அழிக்கும் செயல்முறையில், முடி நிறம் இழப்பதாக கூறுகின்றனர். மெலனோசைட்கள் என்ற செல்கள் தான், நம் தலைமுடி கருநிறமாக இருப்பதற்கு காரணம். கேன்சரை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் செயல்பாட்டின் போது, இவை தங்களை தாங்களே அழித்துக் கொள்வதால், முடி நிறம் இழக்கிறதாம். ஆகவே, கிரே ஹேர் பார்த்து கவலைபடாதீங்க.

News November 10, 2025

திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் நடைபயணம்: அன்புமணி

image

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என தனது நடைபயணத்தின் 100-வது நாள் விழாவில் அன்புமணி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே இந்த மக்கள் சந்திப்பின் நோக்கம் என்றார். பல தடைகளை தாண்டி இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும், இதில் பல மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 10, 2025

ராசி பலன்கள் (10.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!