News August 18, 2025

நான் இறந்துவிட்டேன்.. கல்லூரி மாணவர் விபரீத முடிவு

image

‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? திருச்சி சிவா பதில்

image

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுகவின் திருச்சி சிவாவை களமிறக்க ‘INDIA’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை யாரும் பரிசீலனையில் இல்லை என INDIA கூட்டணி தரப்பு கூறியது. டெல்லியில், வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தையும் INDIA கூட்டணி கூட்டியுள்ளது. இதனிடையே, வேட்பாளர் தேர்வு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

News August 18, 2025

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழை கொட்டும்: IMD

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், ஆக.24 வரை மழை நீடிக்குமாம். கவனமா இருங்க நண்பர்களே!

News August 18, 2025

TNPSC குரூப்-2 இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் வெளியீடு

image

TNPSC குரூப் 2, 2A தேர்வில் (20.6.2024 அறிவிக்கை) பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.29-ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் <>www.tnpsc.gov.in<<>> இணையதளம் மற்றும் தேர்வர்களுக்கு SMS, E-Mail மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

Detox Juice உண்மையிலேயே பயனுள்ளதா?

image

உடலை சுத்தப்படுத்துவதற்காக ABC ஜூஸ், கற்றாழை ஜூஸ் என பல வகையாக Detox Juice-களை பலர் அருந்துகின்றனர். ஆனால் இந்த ஜூஸ்கள் உண்மையிலேயே நமக்கு பயனளிக்கிறதா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் மருத்துவர்கள். நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற 24 மணி நேரமும் உழைக்கிறது கல்லீரல். இதனால் Detox juice நமக்கு தேவையற்றது எனவும் அது மக்களை ஏமாற்றி காசு பார்க்கும் வழி எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News August 18, 2025

கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு நாளை மறுநாள் (ஆக.20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களுக்கு விடுமுறை என கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில், செப். 13-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

ECI தலைமை ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்?

image

ECI-ன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3ல் இரு பங்கு ஆதரவு பெற்று இந்த பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றால், அந்த அதிகாரியை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

News August 18, 2025

பச்சைப்பொய் கூறும் CM ஸ்டாலின்: EPS விளாசல்

image

525 வாக்குறுதிகளில் ஸ்டாலின் அரசு 10% கூட நிறைவேற்றாமல் 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப்பொய் கூறி வருகிறது என EPS சாடியுள்ளார். கலசபாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிலிண்டருக்கு ₹100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் கருத்து?

News August 18, 2025

4 நாள்களில் ₹404+ கோடி.. வசூல் சூறாவளியாக மாறிய ‘கூலி’..!

image

ரஜினி நடிப்பில் ரிலீசாகி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது ‘கூலி’ திரைப்படம். ஆக. 14-ல் வெளியான இப்படம் 4 நாள்களில் உலகளவில் ₹404+ கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உலகளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை கூலி படைத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழில் முதல் ₹1,000 கோடி வசூலான படம் என்ற சாதனையை ‘கூலி’ படைக்குமா?

News August 18, 2025

ஏர்டெல் ஆஃபர்.. இனி இசை மழையில் நனையலாம்!

image

ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர் கொடுத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். APPLE MUSIC சேவையை 6 மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது. MY AIRTEL APP-ல் சென்று வாடிக்கையாளர்கள் இதனை உறுதி செய்து கொள்ளலாம். 6 மாதத்திற்கு பிறகும் இந்த சேவையை தொடர விரும்பினால், மாதம் ₹119 கட்டணம் செலுத்த வேண்டும். இசை மழையில் நனைய தயாரா..!

error: Content is protected !!