News July 23, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 424 ▶குறள்: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. ▶பொருள்: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

News July 23, 2024

அறிமுக போட்டியிலேயே புதிய சாதனை படைத்த வீரர்

image

உலகக் கோப்பை (2027) தகுதிச் சுற்று போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வீரர் சார்லி கேசல் புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 5.4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக ரபாடா அறிமுகப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

News July 23, 2024

ஷங்கரின் அடுத்த பட ரிலீஸ் தேதி வெளியானது

image

‘இந்தியன்-2’ படத்தையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வரும் டிசம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

தீ விபத்தால் சாய்ந்த INS பிரம்மபுத்ரா கப்பல்

image

மும்பை கடற்படை கப்பல் தளத்தில் ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை விபத்து ஏற்பட்ட நிலையில், நேற்று காலை தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக கப்பலின் ஒரு பகுதி சாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காணாமல் போன இளம் மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 23, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News July 23, 2024

முதல் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம் அணி

image

மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியில் தாய்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய தாய்லாந்து அணி 20 ஓவரில் 96/9 ரன்கள் எடுத்தநிலையில், பின்னர் களமிறங்கிய வங்கதேசம் 17.3 ஓவரில் 100/3 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இருப்பினும் ‘பி’ பிரிவுக்கான புள்ளிப் பட்டியலில் தாய்லாந்து 2வது இடத்திலும், வ.தேசம் 3வது இடத்திலும் உள்ளது.

News July 23, 2024

காசாவில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

image

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே போர் காரணமாக காசா நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை காசாவில் 39,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் 290 நாட்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 89,818 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News July 23, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News July 23, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ 2023- 2024 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, மக்களவையில் தாக்கல்
➤ BSP மாநிலத் தலைவராக ஆனந்தன் தேர்வு
➤ ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு BSP மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது
➤ இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
➤ நடப்பாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பு இல்லை – மத்திய அரசு

News July 23, 2024

TNPL: சென்னை அணி அபார வெற்றி

image

TNPLல் இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது சென்னை அணி. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக ஆதி 26 ரன்கள் குவித்ததுடன் 1 விக்கெட் கைப்பற்றிய அபிஷேக் தன்வார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

error: Content is protected !!