News May 12, 2024

பி.எஸ்-4 திரவ என்ஜின் சோதனை வெற்றி

image

PSLV ராக்கெட்டில் பயன்படுத்த புதிய பி.எஸ்-4 திரவ என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘அடிட்டிவ் மேனுபேக்சரிங்’ தொழில்நுட்பம் மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பி.எஸ்-4 திரவ என்ஜினில் 4 வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் புரோபல்சன் மையத்தில் 665 வினாடிகள் நடந்த அனைத்து சோதனைகளும் வெற்றிபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 12, 2024

முத்திரைக் கட்டணம் 10%-33% வரை உயர்வு

image

தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள் உயர்ந்துள்ள சூழலில், முத்திரைக் கட்டண உயர்வு மேலும் சுமையை உண்டாக்கும் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News May 12, 2024

விக்கெட்களை இழந்த தடுமாறும் ராஜஸ்தான்

image

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த தடுமாறி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வந்தது. ஆனால், தற்போது சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக, CSK வீரர் சிமர்ஜீத், ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

News May 12, 2024

பாகிஸ்தான் அணுஆயுதங்கள் தரம் குறைந்தவை

image

பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் தரம் குறைந்தவை என்று மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணுஆயுதங்களை காட்டி காங்கிரஸ் தலைவர்கள் அச்சுறுத்துவதாகவும், ஆனால் உண்மையில் அந்நாட்டின் அணுஆயுதங்கள் தரம் குறைந்தவை, அதை கையாள கூட முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது என்று அவர் கூறினார். அணுஆயுதங்களை பாகிஸ்தான் விற்க முயற்சிப்பதாகவும், ஆனால் அதை வாங்க ஆளில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

News May 12, 2024

19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுகை, தஞ்சை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

News May 12, 2024

11 முறை டாஸ் தோற்ற ருதுராஜ் கெய்க்வாட்

image

RR-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், CSK ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் டாஸில் தோல்வி அடைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளை எதிர்கொண்ட CSK அணி, அதில் 11 முறை டாஸில் தோல்வி அடைந்தது. இதனால், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டாஸில் தோல்வி அடைந்த கேப்டன் என்ற கோலியின் மோசமான சாதனையை ருதுராஜ் சமன் செய்துள்ளார். 2022இல் சஞ்சு சாம்சன் 13 முறையும், 2012இல் தோனி 12 முறையும் டாஸில் தோற்றுள்ளனர்.

News May 12, 2024

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

image

தனுஷ் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கவனம் பெற்றவர் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘Suriya 44’ படத்தில் இணைந்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை 2டி & ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

News May 12, 2024

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக மீட்கும்

image

மத்தியில் பாஜக கூட்டணி அரசு மீண்டும் அமைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மீட்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், அதை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக மீட்டெடுக்கும் என்றும் கூறினார்.

News May 12, 2024

விபத்தில் சிக்கிய ஏ.வ.வேலு மகன்

image

திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏந்தல் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது கார் மீது, மற்றொரு கார் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ஏ.வ.வேலுவின் மகன் கம்பன், லேசான காயமடைந்த நிலையில், கார் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 12, 2024

எவரெஸ்ட் சிகரத்தில் 29ஆவது முறையாக ஏறி உலக சாதனை

image

எவரெஸ்ட் சிகரம் மீது 29ஆவது முறையாக ஏறி, நேபாள மலையேற்ற வீரர் காமி ரிதா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். கடல்மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் அடி உயரத்தில் உள்ள அந்த சிகரமே, உலகின் மிகப்பெரிய மலை சிகரம். அதன்மீது 28 முறை ஏறி, காமி ரிதா சாதனை படைத்திருந்தார். இதனால் அவர், “எவரெஸ்ட் மனிதர்” என்ற புனைப் பெயரில் அழைக்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் மீண்டும் 2ஆவது முறையாக ஏறியுள்ளார்.

error: Content is protected !!