India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். ➤ குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3,000 – அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு ➤ காஸாவில் உடனடிப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் . ➤ பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு ➤ நடப்பு ஐ.பி.எல் சீசனை வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று வரை நடத்தப்பட்ட பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் ரூ.11.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.10.28 கோடி ரொக்கம், ரூ.0.68 கோடி மது பாட்டில்கள், ரூ.0.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், 0.22 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.0.41 கோடி இலவச பரிசுப்பொருட்கள் அடங்கும்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப்பின் முல்லாப்பூரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட், டெல்லி அணியின் கேப்டனாக கிரிக்கெட் களத்திற்கு வருகிறார். இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தலா 16 வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.
▶ மார்ச் 23 ▶ பங்குனி – 10 ▶ கிழமை: சனி ▶ திதி: சதுர்த்தசி ▶ நல்ல நேரம்: காலை 07.30 – 08.30, மாலை 05.00 – 06.00 ▶ கெளரி நேரம்: காலை 10.30 – 11.30, மாலை 09.30 – 10.30 ▶ ராகு காலம்: காலை 09.00 – 10.30 ▶ எமகண்டம்: பிற்பகல் 01.30 – 03.00 ▶ குளிகை: காலை 06.00 – 07.30 ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர்.
ரஷ்யாவில் போருக்கு எதிராக கவிதை எழுதிய ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உக்ரைன் போர் குறித்து பேசுவோருக்கு ரஷ்யா சிறைத்தண்டனை விதிப்பது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், உக்ரைன் போருக்கு எதிராக கவிதை எழுதிய லுதூனியாவில் வசிக்கும் ஆசிரியர் அலெக்சாண்டர் பைவ்ஷேவ், பயங்கரவாத நடவடிக்கைக்கு மக்களை அழைத்ததாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக – காங்கிரஸ் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுடன், சிவகங்கையில் காங்கிரஸை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள இமகமுகவின் தேவநாதன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுதவிர விளவங்கோடு இடைத்தேர்தலிலும், இரு தேசிய கட்சிகளும் நேரடியாக மல்லுக்கட்டுகின்றன.
ரத்த சோகை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் இரும்புச் சத்து பற்றாக்குறையால் ரத்த சோகை உண்டாகிறது. கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற வைட்டமின் – சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும்.
அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லையென சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், ‘கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டுமென்பதில் ஏற்கெனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினர்’ என்றார்.
ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாதென சமூகவலைதள பிரபலங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வரும் மார்ச் 25ஆம் தேதி ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர். அதே போல, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்களும், மார்ச் 25ஆம் தேதி அந்தந்த தொகுதிகளில் தங்களது வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.