India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக ₹6,000 வரை விற்பனையான நிலையில், இம்முறை ₹1,700 – ₹6,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காலை 10.10 மணிக்கு, சிஎஸ்கே மற்றும் பேடிஎம் இன்சைடர் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
வருகிற 31ஆம் தேதி வங்கிகளில் வழக்கமான பரிவர்த்தனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், “இந்த நிதியாண்டு 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் செயல்படவுள்ளன. அன்றைய தினம் வழக்கமான பரிவர்த்தனைகள் நடைபெறாது” என்றனர்.
தேர்தலுக்கு தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலை, மோசமாகி வருகிறது. காங்கிரஸுக்கு வலுவான எதிர்க்கட்சியாக திகழ்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மே.வங்கம், திரிபுரா, கேரளாவில் ஆட்சியில் இருந்தன. மே.வங்கத்தில் 2011ல் திரிணாமுலிடமும், திரிபுராவில் 2018ல் பாஜகவிடமும் ஆட்சியை இழந்தது. நாடாளுமன்றத்திலும் எம்பிக்கள் எண்ணிக்கை 5ஆக குறைந்துவிட்டது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை பரிதாபமாகி உள்ளது.
இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ள மறுபயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனத்துக்கு ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புஷ்பக் (புஷ்பகம்) விமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. குபேரனால் பயன்படுத்தப்பட்ட அந்த வாகனத்தை ராவணன் அபகரித்து கொண்டதாகவும், ராவணனை வதம் செய்தபின், அயோத்திக்கு சீதா தேவியுடன் அந்த வாகனத்திலேயே ராமர் திரும்பி வந்ததாகவும் ராமாயணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் நடைபயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சென்னை கிண்டியில் நேற்று பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர், அங்கிருந்து திருச்சி சென்றார். பின்னர் சிறுகனூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். இந்நிலையில் இன்று காலை தஞ்சையில் நடைபயணமாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உங்கள் அன்பை பார்க்கும் போது, எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது என நடிகர் விஜய் எமோஷனலாக பேசியுள்ளார். கேரளாவில் ரசிகர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு 2 கண்கள் மாதிரி. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த 32 வருடங்களில் என்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல், உங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்ததற்கு நன்றி. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்கள் விஜய் தான்” எனக் கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா (31) தனியார் விடுதியை புக் செய்திருக்கிறார். நேற்றிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இந்த விபரீதம் நடைபெற்றதாக தெரிகிறது. அனு சத்யாவின் தோழி சைலஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை மகாலட்சுமி, தனது பிறந்தநாளில் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “எனது பிறந்தநாளில் விலைமதிப்பற்ற பரிசு வழங்க முடிவு எடுத்தேன். உடல் உறுப்புகள் தானம் செய்வதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இறந்த பிறகும் எனது உறுப்புகள் மற்றவர்கள் வடிவத்தில் வாழும்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு ஏணி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். இக்கட்சியின் சார்பில் நவாஸ் கனி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அகில இந்திய கட்சியான IUML, கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திமுகவிடம் கூறியிருந்தது. அதன்படி, தற்போது ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
திமுகவில் குடும்பத்தினருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுபோல விமர்சித்துவிட்டு, தருமபுரியில் பாமக தனது வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியாவை நிறுத்தியுள்ளது. விருதுநகரில் பாஜக தனது வேட்பாளராக சரத்குமார் மனைவி ராதிகாவை நிறுத்தியுள்ளது. விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனை தேமுதிக களமிறக்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.