India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். பிகார் மாநிலம் சமஸ்திபூருக்கு அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது அந்த ஹெலிகாப்டரில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். மழை காரணமாக தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்களுக்கு துன்பத்தை மட்டுமே திமுக அரசு வழங்கியிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
விரக்தி, தொடர் ஏமாற்றத்தின் வெளிப்பாடே எதிர்மறை எண்ணங்கள். இந்த எண்ணங்களை கொண்டிருப்போருக்கு, கீழ்காணும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 1) தைராய்டு பிரச்னை 2) இதயத் துடிப்பு அதிகரிப்பு 3) செரிமான பிரச்னை 4) உயர் ரத்த அழுத்தம் 5) முதுகு வலி. அதனால், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்ப்போம்.
RCB-DC இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தப் போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில், பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடும். வெற்றியைத் தொடருமா பெங்களூரு அணி?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய சென்னை அணி பொறுப்புணர்ந்து ஆடியது. இதனால் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நிச்சயமாக அந்தப் போட்டியில் நான் இல்லை. மத்தியில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தார்மீக பொறுப்பை மட்டுமே ஏற்பேன் என்று பதிலளித்துள்ளார்.
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI, அபராதம் செலுத்த வலியுறுத்தும் வங்கிகள் மீது Bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனக் கூறியுள்ளது.
இந்திய அணியில் இனவெறி நிலவியதாக முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த அவர், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பைகளை கைப்பற்றிய இந்திய அணியில் விளையாடியிருந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட் அணியில் தாம் விளையாடிய காலம் முதல், தென்னிந்திய மக்களுக்கு எதிரான மனநிலையை கண்டதாகவும், “மதராசி” என்று தாம் அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
2023-24 Q4 காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ₹17,528 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹5,496 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 222% உயர்ந்துள்ளது. அதேபோல், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹1,05,932 கோடியில் இருந்து ₹1,19,986 கோடியாக உயர்ந்துள்ளது. EV வாகனப் பிரிவில், டாடா 48% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.