India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சொமாட்டோ (Zomato) நிறுவனத்தின் உரிமையாளர் தீபிந்தர் கோயல், மெக்சிகோவைச் சேர்ந்த மாடலான கிரேஸியா முனோஸை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த திருமணம் குறித்து, அவர்கள் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை. 41 வயதாகும் தீபிந்தர் கோயலுக்கு இது 2ஆவது திருமணம் ஆகும். முன்னதாக டெல்லி ஐஐடி-இல் படிக்கும் போது காஞ்சன் ஜோஷி என்பவரை திருமணம் செய்து இருந்தார்.
மதவாதத்தை பாஜக பரப்புவதால், திமுக கூட்டணியில் சேர்ந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் அரசியலை நான் வெறுத்தேன். ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்து அரசியலுக்கு வந்தேன். திமுக கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்சி (பாஜக) மக்களை மதத்தின் மூலம் பிளவுபடுத்துவதால், திமுக அணியில் இணைந்தேன்” என்றார்.
கல்கி 2898ஏடி படப்பிடிப்பில் அசைவம் சாப்பிட்டு கொண்டு, கடவுள் கிருஷ்ணராக பிரபாஸ் நடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்கி 2898ஏடி திரைப்படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பின் போது அவர் அசைவம் சாப்பிடுவதாகவும், பிறகு கிருஷ்ணர் வேடத்தில் நடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என குஜராத்தின் சபர்கந்தா தொகுதி பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்களான பின்பு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பையும் பிகாஜி வெளியிடவில்லை.
நல்ல நோக்கத்துடனே தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசியல் கட்சிகள் செயல்பட நிதி தேவைப்படுகிறது. அந்த நிதி அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக வெளிப்படைத் தன்மையுடன் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே தேர்தல் பத்திரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது” எனக் கூறினார்.
பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டிஜிசிஏ அதிகாரிகள், ஏர் இந்தியா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு ஏர் இந்தியா அளித்த பதில் திருப்தி அளிக்காததால், அந்நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்திருக்கிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சிக்கு எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கலுக்கு சீனிவாசன், சென்னை வடக்குக்கு ஜெயக்குமார், திருச்சிக்கு விஜயபாஸ்கர், காஞ்சிபுரத்துக்கு வளர்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார். சென்னை அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய அவர், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக, டு பிளெசிஸ், கோலி, கேமரன் க்ரீன் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வங்கதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது. ‘சித்தா’ படத்திற்கு பிறகு எஸ்.யு அருண் குமார் இயக்கும் இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ED மற்றும் IT ரெய்டு நடைபெற்ற 41 நிறுவனங்களிடம் இருந்து பாஜக ரூ.2,471 கோடியை நன்கொடையாக பெற்றிருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு நன்கொடையளித்த 33 நிறுவனங்களுக்கு மத்திய அரசின் 172 ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் இந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.