News March 23, 2024

ஒரு மணி நேரம் விளக்கை அணைத்து வையுங்கள்

image

நாடு முழுவதும் இன்று புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இரவு 8.30 முதல் 9.30 மணி வரை, அவசியமின்றி எரியும் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என பொது மக்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை குறைக்கும் இந்த முயற்சியில், மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

News March 23, 2024

கட்டண உயர்வை திரும்பப் பெறுக

image

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வுக்கு வித்திடும் இந்தக் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என உறுதியளித்தார்.

News March 23, 2024

தேர்தல் வந்தால் மட்டுமே மோடி தமிழகம் வருவார்

image

தேர்தல் வந்தால் மட்டுமே மோடி தமிழகத்துக்கு வருவதாக அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து திருச்சுழியில் பேசிய அவர், “பிரதமர் புயல் மழை அடித்தால் தமிழகத்துக்கு வர மாட்டார். அப்போதெல்லாம் அவருக்கு தமிழக மக்களின் நினைவு வராது. ஆனால் தேர்தல் தேதி அறிவித்தால் இங்கேயே குடியிருப்பார். பிரதமரின் இந்த ஏமாற்று வேலைக்கு மக்கள் நல்ல தண்டனையை தருவார்கள்” என்றார்.

News March 23, 2024

பஞ்சாப் அணி அபார வெற்றி

image

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 175 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், சாம் கரண் சிறப்பாக ஆடி 63 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிபெற 6 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், 2 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தது. பின் லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

News March 23, 2024

IPL டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 5 பேர் கைது

image

ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். CSK-RCB இடையிலான போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்றதாக வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்டுகள் மற்றும் ₹31500 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2024

ஐபிஎல்: கொல்கத்தா அணி பேட்டிங்

image

ஐபிஎல்லில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற SRH கேப்டன் கம்மின்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து KKR அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. சுனில் நரேன், ரசல் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளனர். இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்? என கமெண்ட் பண்ணுங்க.

News March 23, 2024

42 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்து நடிக்கும் ரஜினி – கமல்?

image

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினியும், கமலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் இருவரும் 42 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் படம் என்ற பெருமையைப் பெறும். இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? என கமெண்ட் பண்ணுங்க.

News March 23, 2024

ஐபிஎல் 2024இல் முதல் 50

image

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் பஞ்சாப் அணி வீரர் சாம் கரண் அரைசதம் அடித்துள்ளார். இது இந்த சீசனில் அடிக்கப்படும் முதல் அரைசதமாகும். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிவரும் லிவிங்ஸ்டன் 14* ரன்கள் எடுத்துள்ளார். தற்போது பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 136/4 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிபெற இன்னும் 39 ரன்கள் தேவை என்னும் நிலையில் கைவசம் 24 பந்துகள் மட்டுமே மீதம் உள்ளது.

News March 23, 2024

பலி எண்ணிக்கை 150ஆக உயர்வு

image

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது. பிக்னிக் என்ற இசைக் குழுவினர் நடத்திய இசைக் கச்சேரியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைதாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

News March 23, 2024

தொண்டனின் தலையை கூட அடமானம் வைப்பார்கள்

image

தொண்டனின் தலையை அடமானம் வைக்கவும் பாமக தலைவர்கள் தயங்க மாட்டார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது பாமகவின் வழக்கமாக உள்ளது. முன்னர் அதிமுகவை ஆதரித்தார்கள், இப்போது பாஜகவை ஆதரிப்பதாக கூறுகிறார்கள். அரசியல் லாபம் கிடைத்தால் எதுவும் செய்வார்கள். இவர்களின் இந்த செயலை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்” என்றார்.

error: Content is protected !!