India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பலேனோ, வேகன் ஆர் வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. ஜூலை 30, 2019 – நவம்பர் 1, 2019 வரையான காலத்தில் தயாரிக்கப்பட்ட 11,851 பலேனோ & 4,190 வேகன் ஆர் வாகனங்களின், எரிபொருள் பம்ப் மோட்டாரில் குறைபாடு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, வாகனங்களை திரும்பப் பெற்று, புது பாகத்தை இலவசமாக மாற்றியும் தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
*குறள் பால்: பொருட்பால் | இயல்: அமைச்சியல்
*அதிகாரம்: அமைச்சு
*குறள் எண்: 631
*குறள்:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
*பொருள்: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே சிறந்த அமைச்சர்.
SRH அணிக்கு எதிரான போட்டியில் KNR அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா நடந்துகொண்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர்பெற்ற SRH அணியின் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலின் (33) விக்கெட்டை ராணா எடுத்தார். அகர்வாலை வெறுப்பேற்றும் வகையில், அவரது முகத்திற்கு முன்பாக கையில் முத்தமிட்டு அதை காற்றில் பறக்கவிட்டதை, அப்பட்டமான திமிர்த்தனம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஃபிஷர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் ஜெர்மனி அப்பட்டமாக தலையீடுவதாகவே கருதுகிறோம். இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை ஜெர்மனி கேள்வி கேட்பதை ஏற்க முடியாது. ஜெர்மனியின் அனுமானங்கள் அவசியமற்றவை” எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64,249 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆர்.பி.ஐ வெளியிட்ட குறிப்பில், “மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 603 கோடி டாலர் உயர்ந்து 56,838 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில், நாட்டின் கையிருப்பு 13 கோடி டாலர் உயர்ந்து 469 கோடி டாலராக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரே மதம், ஒரே உணவு, ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது என்று அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், “திமுகவை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி நாம் எடுத்துக்கூற வேண்டும். சர்வாதிகாரி மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீழ்த்துவார்” என்றார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது. 17ஆவது ஐ.பி.எல் தொடரின் 3ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த KNR அணி 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 209 ரன்கள் இலக்கை துரத்திய SRH அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு ₹500 வழங்குவோம் – ஸ்டாலின்
*அண்ணாமலையுடன் அரசியல் விவாதம் செய்ய தயார் – சிங்கை ராமசந்திரன்
*விதிகளை மீறிய ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ₹80 லட்சம் அபராதம் விதிப்பு – டிஜிசிஏ
*ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் தோனி விளையாடாமல் போக வாய்ப்புள்ளது – கிறிஸ் கெய்ல்
*அரபிக் கடலில் 10 போர் கப்பல்களை இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.