India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூரில் ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீண் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குதிரையேற்ற பந்தய நட்சத்திர வீராங்கனை சார்லோட் துஜார்டின் (39) ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். 4 ஆண்டுக்கு முன்பு பயிற்சியின்போது, குதிரையை அவர் 24 முறை சாட்டையால் அடித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதைக் கண்டு கொதிப்படைந்த விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், அவரை குதிரையேற்ற விளையாட்டு சம்மேளனம் (FEI) இடைநீக்கம் செய்துள்ளது. <<-se>>#OLYMPICS<<>>

காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல்துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு எதிரான தனிநபர் வழக்குகளை ரத்து செய்ய கோரி ஏராளமான காவலர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் DSP உள்ளிட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் பணி நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் மீதான வழக்குகளுக்கு மட்டுமே முன் அனுமதி தேவை என நீதிபதி விளக்கியுள்ளார்.

பட்ஜெட்டில் வெள்ளியின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், மூன்றாவது நாளாக இன்று வெள்ளி விலை மேலும் சரிவடைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ₹3 குறைந்து, ஒரு கிராம் ₹89க்கும், கிலோவுக்கு ₹3,000 குறைந்து ஒரு கிலோ ₹89,000க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 3 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹7,000 வரை குறைந்துள்ளது.

‘நீ ஒரு பெண், உனக்கு எதுவும் தெரியாது’ என எம்.எல்.ஏ ரேகாதேவியைப் பார்த்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷிடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் வெறும் எதிர்க்கட்சிக்கு எதிரானவை அல்ல என்றும் ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்க மனப்பான்மையில் திளைத்துவரும் இந்திய சமூகத்தின் கோர முகத்தின் காட்சி எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை இன்று மாலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். காவிரி பிரச்னை குறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு ஜூலை 31 வரை தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த அளவிலான நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி, தனியார் பொறியியல் கல்லூரிகள் மோசடி செய்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? என்று ஆளுநர் ரவி அறிக்கை கேட்டுள்ளார். அதே போல, மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, AICTE உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 211 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் சரிவடைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 குறைந்து ஒரு சவரன் ₹51,440க்கும், கிராமுக்கு ₹60 குறைந்து ஒரு கிராம் ₹6,430க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட் அன்று காலை ஒரு சவரன் தங்கம் ₹54,480க்கு விற்பனையான நிலையில், 3 நாள்களில் ₹3,040 குறைந்து, நடுத்தர மக்களை ஆறுதல் அடைய செய்துள்ளது.

2024-25 பட்ஜெட்டில் பிஹார் & ஆந்திரா மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளதாக INDIA கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த ‘பட்ஜெட் பாகுபாடு’ விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு எதிரான பிரசாரக் கருவியாக மாற வாய்ப்புள்ளது. மாநில சுயாட்சிப் பேசும் கட்சிகளும் தேர்தல் ஆயுதமாக இதனை கையாளலாம்.

கட்டட அனுமதி பெறுவதற்கான சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் தவறான தகவல்களை அளித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள் என்றும், அதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டட உரிமையாளர்கள் அதனை சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. விதிமீறல்களை சரி செய்யாவிடில் அவை அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.