India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், திமுக கூட்டணியில் காங்., எம்.பி மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பரப்புரையை தொடங்கிய ராதிகா, பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான் வந்துள்ளதாக கூறினார். மேலும், அரசியலும், விருதுநகரும் தனக்கு புதிதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. மல்லிகை பூ ₹300லிருந்து ₹750க்கு, பிச்சிப்பூ ₹400லிருந்து ₹1250க்கும், மஞ்சள் கேந்தி ₹40லிருந்து ₹60க்கும், சிவப்பு கேந்தி ₹50லிருந்து ₹80க்கும் வாடாமல்லி ₹40லிருந்து ₹70க்கும், செவ்வந்தி ₹150லிருந்து ₹250க்கும், ரோஜா ₹80லிருந்து ₹150க்கும், சம்பங்கி ₹200லிருந்து ₹350க்கும் விற்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு 1 மணி நேரம் புவி நேரம் கடைபிடிக்கப்பட்டது. இரவு 8.30 முதல் 9.30 மணி வரை அவசியமின்றி எரியும் விளக்குகளை அணைத்து வைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.
சேலத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷூக்கு ஆதரவாக துண்டறிக்கைகளை வழங்கி இபிஎஸ் வாக்குசேகரித்தார். அங்குள்ள பெரியசோகரை பெருமாள் கோயிலில் வழிபட்டு பரப்புரையை தொடங்கிய அவர், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை என்றும், திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை எனவும் விமர்சித்தார். தொடர்ந்து, இன்று மாலை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்க உள்ளார்.
தெலுங்கு தயாரிப்பாளரும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்காடித் தெரு, கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தெலுங்கு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் தற்போது காதலில் விழுந்துள்ளதாகவும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் அவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அஞ்சலி மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை.
தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு புதிய உச்சம் தொட்டுள்ளது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி, மின்விசிறிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 19,409 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 2023 ஏப்ரலில் பதிவான 19,387 மெகாவாட்டை விட அதிகமாகும். இந்த மாத கடைசி அல்லது அடுத்த மாதம் மின்சார பயன்பாடு 20,000 மெகாவாட்டை தாண்டும் என கூறப்படுகிறது.
எண்ணெய் நீராடலால் உடலில் உள்ள வெப்பம் நீங்கி, நன்மை ஏற்படும். இதனால் ஆண்களும், பெண்களும் வாரத்துக்கு 2 முறை எண்ணெய் நீராட வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள். அதேபோல், ஆண்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளியும் எண்ணெய் நீராட வேண்டும், மற்ற நாள்களில் எண்ணெய் நீராடுவது குடும்பத்துக்கும், உடலுக்கும் நல்லதல்ல என்றும் பெரியோர்கள் கூறுவார்கள்.
பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் தேனியில் தான் வெற்றி பெற உள்ளதாக டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது முன்னாள் நண்பர் தங்க தமிழ்செல்வனே திமுக சார்பில் தேனியில் போட்டியிடுவதாக கூறிய அவர், யார் வெற்றி பெற வேண்டுமென மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், மீண்டும் பிரதமராக மோடியே வரப்போகிறார் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனவும் அவர் கூறினார்.
2024 ஐபிஎல் தொடங்கி சில நாள்களே ஆகும் நிலையில், கோப்பையை வெல்லும் அணி எது என்ற விவாதங்கள் தற்போதே தொடங்கியுள்ளன. இதுவரை நடைபெற்ற தொடர்களில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் தலா 5 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. அணியின் பலத்தை பொறுத்தவரை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வலுவாக இருப்பதால், அதில் ஏதேனும் ஒன்றே கோப்பையை வெல்லக்கூடும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.