News April 2, 2024

6,644 கிமீ புதிய தேசிய நெடுஞ்சாலை

image

2024ஆம் நிதியாண்டில் 6,644 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 1,100 கிலோ மீட்டர் கூடுதலாகும். நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் அவசியமாக இருக்கும் நிலையில், அதிக நீளத்திற்கு சாலைகள் அமைப்பதில் புதிய உச்சம் தொடப்பட்டிருக்கிறது.

News April 2, 2024

கச்சத் தீவை தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்த திமுக

image

காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. 1974ஆம் ஆண்டு இந்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியதை குறிப்பிடும் பாஜக, அப்போதைய முதல்வர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த விவகாரத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி.

News April 2, 2024

70 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்

image

Mother of Dragons ( டிராகன்களின் தாய்) என்று செல்லமாக அழைக்கப்படும் Pons – Brooks வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியை நெருங்கி வந்திருக்கிறது. மேற்கு வானில் மிக பிரகாசமாக காணப்படும் இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 1954ஆம் ஆண்டு தென்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு வானில் தெரியும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 2095ஆம் ஆண்டு தென்பட வாய்ப்புள்ளது.

News April 2, 2024

சிறு வயது கனவு நனவான நாள்

image

13 வருடத்திற்கு முன் இதே நாளில், தனது சிறுவயது கனவு நனவானதாக சச்சின் கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 2-ல் நடைபெற்ற ODI உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. அது குறித்த தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின், அந்த நினைவுகளுக்காகவும், அணிக்காகவும், பல லட்சம் மக்களின் நம்பிக்கைக்காகவும் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2024

பார்ட் டைம் அரசியல்வாதிகள்

image

தேர்தல் வந்தால் தமிழகத்திற்கு சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் பிரசாரத்தில் பேசிய அவர், தேர்தல் சீசனுக்காக மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக அரசின் திட்டங்கள் (காலை சிற்றுண்டி) இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே முன்னோடியாக உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

News April 2, 2024

பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் விலை இவ்வளவா?

image

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் PS5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. மற்றபடி ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை. இதன் டிஜிட்டல் எடிசன் விலை ரூ.44,990, டிஸ்க் வெர்ஷன் விலை ரூ.54,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் தொடங்குகிறது.

News April 2, 2024

அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு விவகாரம்

image

அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தேர்தல் வருவதால் மீனவர்கள் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசுகிறது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது அவர்கள் கவலைப்படவில்லை. தற்போது பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசி வருவது வேடிக்கையாக உள்ளது’ என விமர்சித்துள்ளார்.

News April 2, 2024

நடிகர் விஜய் இந்த கட்சிக்கு ஆதரவு? விளக்கம்

image

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டது போன்ற ஒரு போலி அறிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், “தமிழக வளர்ச்சியை மட்டும் பாராமல் தேசிய வளர்ச்சியை பார்க்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று விஜய் சொன்னது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கை போலி என்று தவெகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

News April 2, 2024

இருவர் ஒரே ரன்கள் எடுத்தால், ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

image

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி, ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் இருவரும் அதிக ரன்கள் (181) எடுத்துள்ளனர். ஐபிஎல் விதிகளின்படி இரண்டு வீரர்கள் ஒரே அளவு ரன்கள் எடுத்திருந்தால், அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ளவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். இதன்படி பராக் 160.17 ஸ்ட்ரைக் ரேட்டும், விராட் கோலி 141.40 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளனர். இதன் காரணமாக பராக்கிற்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

IPL: RCB அணி பவுலிங்

image

பெங்களூருவில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதுவரை ஆர்சிபி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 1 வெற்றி 1 தோல்வியுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!