India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ்கார்ட்னில் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில், தொடக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தடுமாறினர். இருப்பினும், கடைசியில் சிறப்பாக விளையாடிய தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி 1,983 புள்ளிகளுடன் 4ஆம் இடம் பிடித்துள்ளது.

சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்தால்தான் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியும் என சீனியர்கள் சிலர் ஈபிஎஸுக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது. இதற்கு உடன்படாத அவர், தென் மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை செய்து சீனியர்களின் அதிகாரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளராம். இதனால், செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் இபிஎஸுக்கு அதீத விசுவாசம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக்கின் மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து இயக்குநர் அமீரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்ததாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அமீர், இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து என்னையும் கைது செய்ய வேண்டும் என விரும்புவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, 2ஆம் பாகம் ‘புஷ்பா தி ரைஸ்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படம் ஆக. 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு, VFX உள்ளிட்ட பணிகள் முடியாததால் ரிலீஸை டிச. 6க்கு ஒத்திவைத்தது. தற்போது ரீஷூட், இறுதிக்கட்ட பணிகளால் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியில் ( RBI) அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடம்: 94. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இன்று முதல் ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.inஇல் பார்க்கவும்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கை உடனே விசாரிக்கவும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

கவுதம் கம்பீர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் கோலியும், ஷர்மாவும் சரியாக ஆடாவிட்டால் தனது அணியில் இடம் பெறமாட்டார்கள் என கம்பீர் கூறியதாகவும், கோப்பையை வென்ற பின் இருவரும் சிறந்த வீரர்கள் என புகழ்ந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 2027 உலகக்கோப்பைக்கு தகுதியானவர்கள் என மாற்றி பேசுவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு (₹83.72) இன்று சரிந்தது. இச்சரிவு இந்தியா பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர், டாலர்களில் கடன் வாங்கியிருந்தால் பணத்தின் மதிப்பு குறைவது பிரச்னையை ஏற்படுத்தியிருக்கும் என்றும் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக் கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்ட நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

<<13696413>>நேபாளத்தில்<<>> கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு விமான விபத்துக்கள் (சுமார் 196 பேர் உயிரிழந்துள்ளனர்) நடந்தேறியுள்ளன. இதற்கு மலைப்பாங்கான நிலப்பரப்பு, கணிக்க முடியாத வானிலை & தளர்வான விதிமுறைகள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் விமானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை எனவும் பராமரிப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.