India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக விலகியிருந்தார். இந்நிலையில், 2 பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்று பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து போஸ்டர் ஒற்றை வெளியிட்டுள்ளது. அதில் `‘ஒருவன் தான் என்று உச்சத்தை தொட முடியும் என நம்புகிறானோ அப்பொழுது ஒரு ஸ்டார் பிறக்கிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க, 4 நாள்கள் பயணமாக அமீரக வர்த்தக அமைச்சர் அப்துல்லா பின் தெளக் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன் போது, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

டெல்லியில் உள்ள ஜல்சக்தி அமைச்சகத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் சற்றுமுன் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை, ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீர் திறப்பு மற்றும் முல்லை பெரியாறு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமிழகத்தில் இரவு 7 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

GST வரி முறையை எளிதாக்கும் வகையில், வருங்காலத்தில் அதன் கட்டண அடுக்குகளை (ஸ்லாப்) 4லிருந்து 3ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய CBIC தலைவர் சஞ்சய் அகர்வால், GSTஇல் உள்ள பல விகிதங்களும் வகைப்பாடுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் அரசு அதனை மாற்றியமைக்க உள்ளதாகக் கூறினார். தற்போது 5%, 12%, 18% & 28% என்ற 4 வகை விகிதங்கள் GST வரி விதிப்பில் நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், விரல் ரேகை மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக, கருவிழி பதிவு மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஷர்மாவுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் 40 வயது பூர்த்தியடைவதால் உடல் தகுதி அடிப்படையில் இடம்பெறுவது கடினம் என அவர் கணித்துள்ளார். அதே சமயம், நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலிக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திற்கு ‘மாம்போ’ என பெயரிடப்பட்டுள்ளது. சிறுவனுக்கும், சிங்க குட்டிக்கும் இடையிலான நட்பை கூறும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக நிஜ சிங்கத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காஜா மைதீன், அப்துல் கனி படத்தை தயாரிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியினை பெற வேண்டுமென்றால் முதல்வர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது அவசியம் என்ற அவர், கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான செயல் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.