News March 24, 2024

தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கும்

image

இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும் என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “கடந்த முறை எங்கள் மீது குற்றம் சுமத்தியதால், இப்போது நாங்கள் கேள்வி கேட்கும் நேரம் வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கற்பழிப்பு, கொள்ளை வழக்குகளை சாதாரணமாக கடந்து செல்கின்றனர். பாஜக அரசு என்ன செய்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 24, 2024

IPL: மும்பை இந்தியன்ஸ் பவுலிங்

image

மும்பை-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா App-இல் இலவசமாக காணலாம். யார் வெற்றி பெறுவார் என்று கமெண்டில் சொல்லுங்க

News March 24, 2024

அரைசதம் விளாசினார் கே.எல்.ராகுல்

image

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி வருகிறார். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர், பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல், 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி தனது 34ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். இதனால் லக்னோ அணி இலக்கை நெருங்கி வருகிறது. யார் வெற்றி பெறுவார்?

News March 24, 2024

புரட்சி பாரதம் புறக்கணிப்பு

image

அதிமுகவின் பொதுக் கூட்டத்தை புரட்சி பாரதம் கட்சி புறக்கணித்துள்ளது. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் புதிய தமிழகம், தேமுதிக, SDPI ஆகிய கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்டிருக்கும் நிலையில், புரட்சி பாரதம் கலந்து கொள்ளவில்லை. தேர்தலில் சீட்டு வழங்காததால் அதிருப்தியில் இருக்கும் புரட்சி பாரதம் கூட்டணியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

News March 24, 2024

ரூ.25 கோடி கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை

image

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா வீரர் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஐபிஎல் ஏலத்தில் ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஸ்டார்க், நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் அள்ளி கொடுத்தாரே தவிர, ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதே சமயம், வெறும் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மற்றொரு கொல்கத்தா வீரரான ஹர்ஷித் ராணா, அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News March 24, 2024

பாஜகவிற்கு பயம் வந்துவிட்டது

image

வடகிழக்கு மாநிலங்களில் போட்டியிட பாஜகவிற்கு பயம் வந்துவிட்டதால் தான், அவர்கள் அங்கு போட்டியிடாமல் இருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் தோற்பது 100% உறுதி. முதல்வர் ஸ்டாலின் கை நீட்டுபவரே அடுத்த பிரதமர்” எனக் கூறியுள்ளார்.

News March 24, 2024

ஹெல்மெட்டை உடைத்த ட்ரெண்ட் பவுல்ட்

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் வீரர் ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்து ஹெல்மெட்டை உடைத்துள்ளது. 3ஆவது ஓவரில் ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்து, லக்னோ வீரர் தேவ்தத் படிக்கல்லின் ஹெல்மெட்டை உடைத்துள்ளது. இதில் சிறிது தடுமாறிய அவர், அடுத்த பந்திலேயே அவுட்டானார். முதல் ஓவரில் டி காக்கை வீழ்த்திய அவர், 24ஆவது முறையாக போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

News March 24, 2024

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் EPS

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இன்று தொடங்கினார். வண்ணாங்கோவில் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி இபிஎஸ் உரையாற்றவுள்ளார். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ, புதிய தமிழகம், தேமுதிக ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

News March 24, 2024

3 ஓவர்களுக்கு 3 விக்கெட்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ அணி திணறி வருகிறது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. குயின்டன் டி காக் 4, தேவ்தத் படிக்கல் 0, ஆயுஷ் பதோனி 1 என முதல் 3 ஓவர்களிலேயே 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். லக்னோ பதிலடி கொடுக்குமா?

News March 24, 2024

வாக்காளர்களே.. இதை செய்தால் உங்கள் பணம் காலி!

image

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்க்குகள் அனுப்பப்படுகின்றன. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற செய்திகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!