India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாமகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “இரண்டு நாள்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் கூட்டணியை காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். ஆனால், நாங்க அப்படி இல்லை. துளசி வாசம் மாறலாம். ஆனால் தவசி வார்த்தை மாறாது” என விஜயகாந்த் வசனத்தை பேசி பாமகவை விளாசியுள்ளார்.
பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ளார். டெல்லி பாஜக தலைமை அறிவித்திருக்கும் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கங்கனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா போட்டியிட இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு ஆதரவாக பேசிவரும் கங்கனாவுக்கு தலைமை இந்த முறை வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
111 பேர் அடங்கிய 5வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டாலுக்கு, அவர் எம்பியாக இருந்த குருஷேத்ரா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பல்பூர் – தர்மேந்திரா பிரதான், சுல்தான்பூர் – மேனகா காந்தி, தும்கா – சீதா சோரன், பெல்காம் – ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மே 2024 CA தேர்வு எழுதுபவர்கள், தேர்வு எழுதும் மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என ICAI தெரிவித்துள்ளது. இடைநிலை, குரூப் 1, குருப் 2, சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள் வரும் மே மாதம் தொடங்குகிறது. தேர்வு எழுதுவோர் தேர்வு எழுதும் இடம், குரூப் மற்றும் மொழியை, வரும் மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை <
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, சாய் சுதர்ஷன் 45, ஷுப்மன் கில் 31 ரன்கள் குவித்தனர். மும்பை சார்பில், பும்ரா அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
5ஆது வேட்பாளர் பட்டியலை தேசிய பாஜக தலைமை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி, கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து கே.சுரேந்திரன் களமிறங்கவுள்ளார். பிலிபிட் தொகுதியில் தற்போது எம்.பியாக இருக்கும் வருண் காந்திக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. மாறாக ஜிதின் பிரசாதா களம் இறக்கப்படுகிறார். மொத்தம் 111 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஹரியானா மாநில காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால், காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருக்கிறார். இந்த முறை குருக்ஷேத்ரா தொகுதி ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இவர் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசம் மகளிர் அணிக்கு எதிரான ODI போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மொலினக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மொத்தம் 10 ஓவர்கள் வீசி, 5 ஓவர்கள் மெய்டனாக வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். குறிப்பாக 53 டாட் பால்களுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆஸி.,யின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேசம் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி., 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ரசிகர்களுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ரசிகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் 30 நிமிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமும் கட்டணம் நிர்ணயித்துள்ளேன். அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ வேண்டாம். பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தினை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. கணவர் இறந்தபின் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்தப் பெண்ணுக்கு அரசு ₹2 லட்சம் வழங்கவுள்ளது. எதிர்பாராத விதமாக கணவர் இறந்துவிட்டால் பெண்கள் முடங்கிவிடாமல், மறுமணம் செய்து கொண்டு உறுதியோடு வாழ வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.