News March 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 25, 2024

குலதெய்வத்தை கும்பிட்ட ஓபிஎஸ்

image

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தன் குலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வழிபட்டுள்ளார். அத்துடன், மக்களவைத் தொகுதியில் வெற்றிப்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது பேசிய அவர், ” ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்” என்றார்.

News March 25, 2024

ஜி.வி.பிரகாஷின் ‘டியர்’ படம் ஏப்.11இல் வெளியீடு

image

ஜி.வி.பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டியர்’ திரைப்படம், வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படமானது, காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘தலவலி’, கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

News March 25, 2024

ஆட்டநாயகன் விருதை அவருக்கு தான் தந்திருக்க வேண்டும்

image

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர், “RR அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் ஷர்மாவுக்கு தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் மட்டும் சிறப்பான 3 ஓவர்களை வீசவில்லை என்றால், நான் இந்த விருதை வாங்கியிருக்க முடியாது” என்றார்.

News March 25, 2024

மோடி செய்த நன்மை என்ன?

image

மீண்டும் மோடி வேண்டும் என்கிறார்கள்; எதற்காக? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு அவர் ஒரு நன்மையையாவது செய்திருக்கிறாரா? என புதக தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ‘திமுக கொடுத்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டங்களுக்கு இப்போது எங்கே?’ என வினவியுள்ளார்.

News March 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 25, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் – அண்ணாமலை
*பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.
*SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
*மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.
*5ஜி சேவை கட்டணத்தை 5% முதல் 10% வரை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

News March 25, 2024

விஜய் டிவி புகழ் நடிக்கும் ‘டைமண்ட் தோனி’

image

‘விஜய் டிவி புகழ்’ நடிக்கும் புதிய படத்திற்கு ‘டைமண்ட் தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜோஜின் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டைமண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அபிஷேக் இசையமைத்து வருகிறார். மேலும், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

மும்பையை வீழ்த்தியது குஜராத்

image

MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் GT அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த GT அணி 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய MI அணி 20 ஓவரில் 162 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பந்துவீச்சாளர்கள் ரஷித், ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீச, மும்பை அணியை குஜராத் அணி வீழ்த்தியது.

News March 24, 2024

நைட்டு போன் பாக்குறீங்களா? ஆபத்து

image

இரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், “போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். அது தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கும்”எனக்கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!