India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘முண்டாசுபட்டி’ இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக பேசப்படுகிறது. அனேகமாக இந்தப் படம் அவர்களின் கூட்டணியில் வெளியான முதல் படமான முண்டாசுப்பட்டியின் 2ஆம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2014 இல் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாது வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து, மார்ச் 7 ஆம் தேதியன்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பணத்தை செலுத்தும் கடைசி DUE தேதியை, குறைந்தபட்சம் ஒருமுறை மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ அனுமதியளித்துள்ளது. இதனை ஐ.வி.ஆர்., இணைய வங்கி சேவை, செயலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
2007 ஆம் ஆண்டு முதல் அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. *1807 – அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது. *1918 – பெலருஸில் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. *1926 – ஈழ எழுத்தாளர் டானியல் பிறந்த நாள். *1954 – முதல் வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்.சி.ஏ நிறுவனம் வெளியிட்டது. *2014 – தமிழக மார்க்சிய திறனாய்வாளர் தி.க.சி மறைந்த நாள்.
KKR அணியில் தனது அதிரடியான பேட்டிங்கால் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ரிங்கு சிங். அவர் தனது உரிமையாளரான ஷாருக்கானுடன் குடும்ப உறுப்பினர் சகிதம் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்டா பதிவில், “என் இதயத்தை சிரிக்க வைப்பவர்” என்று குறிப்பிட்டுள்ளார். ரிங்கு சிங்கின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் வந்தால் பாஜக மேலிடம் தொடங்கி TTV தினகரன் வரை அனைவரும் தன்னைத் தேடிவருவார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு ஆளான அவர், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக வரும்பட்சத்தில், தனது அடுத்த இன்னிங்சை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு உதவ திரையிசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் இசையமைப்பாளர் சபேஷ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அத்துடன், மியூசிக் யூனியன் கட்டடத்தைப் புதுப்பிக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளதாக அறிய முடிகிறது. இதற்காக இசை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டும் எண்ணத்தில் இளையராஜா, கங்கை அமரன், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், போன்ற மூத்தவர்களிடம் அவர் சம்மதம் கேட்டிருக்கிறாராம்.
*குறள் பால்: அறத்துப்பால் | இயல்: துறவறவியல்
*அதிகாரம்: அருளுடைமை | குறள் எண்: 241
*குறள்:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
*பொருள்: மிகக் கொடிய உள்ளம் கொண்ட இழிவான எண்ணம் கொண்ட மக்களிடம் கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருள்செல்வத்துக்கு ஈடாகாது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் பாரிஸ் (40), உலகின் மிகக் கடினமான பார்க்லி மராத்தானை நிறைவுசெய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். 100 மைல் பந்தயத்தை (5 சுழல்கள், 54,200 அடி ஏற்றப்பாதை கொண்டது) 59:58:21 மணி நேர கட்-ஆப்பில் நிறைவு செய்து, களைப்பில் அவர் சரிந்து விழும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1989 இல் தொடங்கிய இந்த மராத்தானை இன்றுவரை 20 ஆண்கள் மட்டுமே நிறைவு செய்துள்ளனர்.
இந்தியாவுடனான வர்த்தக உறவை மீண்டும் தொடங்க வேண்டுமென பாகிஸ்தான் வர்த்தகர்கள் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக்தர் கூறியுள்ளார். லண்டனில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அவர், “வர்த்தகர்களின் கோரிக்கை குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறோம்” எனக் கூறினார். கடந்த 2019 இல் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை பாஜக அரசு ரத்து செய்தபோது, இந்தியா உடனான வர்த்தக உறவை பாக். துண்டித்தது.
நிலவின் தென் பகுதியில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதிக்கு பிரதமர் மோடி ‘சிவசக்தி’ என பெயர் சூட்டியது அனைவரும் அறிந்ததே. தற்போது அந்த பெயருக்கு, கோள்களுக்கு பெயர் சூட்டுவதற்கான சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆக.,23 ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.