News July 27, 2024

ITR தாக்கல்: வலைதளங்களில் கொந்தளிக்கும் மக்கள்

image

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை
சுமார் 5 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். எனினும், தாக்கலின்போது, வருமான வரி இணைய தளத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவதாக, சமூக வலைதளங்களில் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இத்தகைய பிரச்னைகள் அவ்வப்போது தீர்க்கப்பட்டு, இணையதளம் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்படும் என, வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.

News July 27, 2024

ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி? (1/3)

image

இந்திய அரசுத் துறையில் அதிகாரம் மிக்கப் பதவிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அமர்த்தப்படுவர். அந்த பதவிக்கு எப்படி தேர்வு நடைபெறுகிறது, என்னென்ன தேர்வு நடத்தப்படுகிறது? என்பது குறித்து இங்கு காணலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். அந்தத் தேர்வு, 2 கட்டங்களைக் கொண்டது. முதல்கட்டத்தில், ஆரம்ப நிலை எனப்படும் முதல் நிலைத் தேர்வு நடத்தப்படும்.

News July 27, 2024

ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி? (2/3)

image

முதல்நிலை தேர்வில் 2 தாள்கள் உண்டு. அதில் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், 2ஆவது கட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 2 விதமாக நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் 9 தாள்கள் உண்டு. அதாவது, 4 தாள்கள் பொது அறிவுத் தாள்கள், 2 விருப்பப் பாடத் தாள்கள், 1 கட்டுரைத் தாள், 2 மொழித் தாள்கள் ஆகும்.

News July 27, 2024

ஐஏஎஸ் அதிகாரியாவது எப்படி? (3/3)

image

சிவில் சர்வீஸ் தேர்வை 21 வயது நிரம்பியோர் எழுதலாம். கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற புத்தக அறிவு மட்டும் போதாது. பொது அறிவு, அலசி ஆராயும் திறன், விவாதிக்கும் திறன் வேண்டும். தேர்வு மதிப்பெண்படி தயாரிக்கப்படும் ரேங்க் அடிப்படையில் விருப்பப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கப்படும்.

News July 27, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கிய ஊர்காவல் படை காவலர்

image

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த பெரம்பூரை சேர்ந்த பிரதீப், நோட்டமிட்டு கொலைக் கும்பலை அப்பகுதிக்குள் வரச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவு உதவி ஆய்வாளரின் மகன் ஆவார். இக்கொலையில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரும்

News July 27, 2024

இஸ்ரேல் பிரதமர் ஒரு காட்டுமிராண்டி: பிரியங்கா

image

காசாவில் இனப்படுகொலை நடத்திவரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு காட்டுமிராண்டி என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்பு & வன்முறையில் நம்பிக்கையில்லாத உலக அரசுகளுக்கும், இஸ்ரேலிய குடிமக்களுக்கும் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 27, 2024

உலகை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் எது தெரியுமா?

image

உலகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமாக சிலியில் 1960 மே 22ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கமே கூறப்படுகிறது. சிலியின் தெற்கு பகுதியில் உள்ள வால்டிவியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 9.5ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலை தாக்கியுள்ளது. இந்த 2 இயற்கை சீற்றங்களுக்கு சிலியில் 5,700 பேர் பலியானதாகவும், 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

News July 27, 2024

நித்தியானந்தாவுக்கு என்ன ஆனது?

image

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது. அதில், ஜூலை 21இல் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அறிவிப்பு வரவில்லை. இதனால் நித்தியானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஆசிரமம் பெயரில் இருக்கும் பல கோடி சொத்துகளுக்காக யாரோ சிலர் வீடியோவை வெளியிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

News July 27, 2024

குறைந்த வட்டியில் தனிநபர் கடன் தரும் 5 வங்கிகள்

image

உடனடி தேவைக்காக வங்கிகள் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை “பெர்சனல் லோன்” எனப்படும் தனிநபர் கடன் வழங்குகின்றன. அந்தக் கடனை 5 வங்கிகள் குறைந்த வட்டியுடன் தருகின்றன. அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
1) HDFC Bank: 10.75%- 24%
2) ICICI Bank: 10.65%- 16%
3) SBI Bank: 11.15%- 15.50%
4) Kotak Mahindra: 10.99%- 16.99%
5) PNB: 12.75%- 16.25%

News July 27, 2024

சாலையோரம் வசித்த மக்கள் பாரிஸில் இருந்து வெளியேற்றம்

image

ஒலிம்பிக் போட்டிகளால் விழாக்கோலம் பூண்டுள்ள பாரிஸ் நகரத்தில் சாலையோரம் வசித்த மக்களை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். சாலையோரம் வசித்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாவர். ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை அம்மக்களை முகாம்களில் தங்க வைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன.

error: Content is protected !!