News July 27, 2024

இமானுவேல் மேக்ரானை சந்தித்த நீடா அம்பானி

image

முகேஷ் அம்பானி, அவரது மனைவியும், சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானி ஆகியோர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தனர். பாரிஸில் ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவை நேரில் கண்டு ரசித்த அவர்கள், நிகழ்ச்சிக்கு பின் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நீடா அம்பானி ஒலிம்பிக்ஸ் கமிட்டி உறுப்பினராக 2ஆவது முறையாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

News July 27, 2024

இந்திய அணி பேட்டிங்

image

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள IND அணி, 3 T20 போட்டிகளில் விளையாடுகிறது. கென்டியில் நடைபெறும் முதல் போட்டியில், டாஸ் வென்ற SL அணி கேப்டன் அசலங்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்?

News July 27, 2024

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர்கள்

image

கேரளாவில் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில், நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப் காயமடைந்தனர். அர்ஜுன் டி.ஜோஸ் இயக்கும் ‘ப்ரோமான்ஸ்’ படத்தின் சேஸிங் காட்சி கொச்சியில் எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விபத்தில் அர்ஜுனுக்கு லேசான காயம், சங்கீத்துக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 27, 2024

தமிழக தொல்லியல் துறையில் சமஸ்கிருதம் திணிப்பா? சீமான்

image

தொல்லியல் தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கு சமஸ்கிருதம் தெரிந்தோர் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News July 27, 2024

திருடுபோன ஸ்மார்ட்போனை இப்படி முடக்கலாம்

image

கணினி காலத்தில் கடவுச்சொல், முக்கிய தகவல்களை ஸ்மார்ட் போன்களில் சேமித்து வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. அந்த ஸ்மார்ட்போனை யாரேனும் திருடி விட்டால் முக்கியத் தகவல் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, திருடுபோன ஸ்மார்ட்போனை எளிதில் முடக்க வசதியுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் 14422 எண்ணைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தால் உடனே முடக்கப்பட்டு விடும்.

News July 27, 2024

பெங்களூருவில் நாய் கறி விற்பனை?

image

பெங்களூருவில் ஆட்டுக் கறி என்ற பெயரில், நாய் கறி விற்கப்பட்டதாக புகார் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அசைவ உணவு ஓட்டல்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூரிலிருந்து கடத்தப்படும் நாய் கறி பெங்களூருவில் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கறி மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

News July 27, 2024

SL Vs IND: இந்தியாவின் ஆடும் லெவனை அறிவித்த ஜாபர்

image

இலங்கைக்கு எதிராக முதல் டி20 போட்டிக்கான தனது ஆடும் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள அவர், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார். அணி விவரம்: ஜெய்ஸ்வால், பண்ட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிராஜ்.

News July 27, 2024

நாட்டு சோளம் விலை கடும் சரிவு

image

நாட்டு சோளம் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். விதைக்கும் போது கிலோ ₹100 வரை கொள்முதல் செய்யப்பட்ட நாட்டு சோளம் தற்போது, ₹36ஆக சரிந்துள்ளது. தென்காசி மாவட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் வரை நாட்டு சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், உரிய விலை இல்லாததால் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News July 27, 2024

பெங்களூருவில் இளம் பெண்ணை கொன்றவர் கைது

image

பெங்களூருவில், இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோரமங்களா அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த கிருதிகுமாரி, 3 நாள்களுக்கு முன் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ வைரலான நிலையில், தப்பியோடிய அபிஷேக், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர் பெங்களூரு அழைத்து வரப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர்.

News July 27, 2024

இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

image

மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 6 சுற்றுகளின் முடிவில் 580 புள்ளிகளுடன் மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் நபராக அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை அவர் பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. <<-se>>#OLYMPICS2024<<>>

error: Content is protected !!