India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை NIA-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள இச்சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் டெல்லி போலீஸ் விசாரித்து வந்தது. இதில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கினை NIA-விற்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது. டெல்லி போலீஸ் சேகரித்த ஆதாரங்களை பெற்றுள்ள NIA, விரைவில் முதற்கட்ட தகவல் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.

உலகின் முன்னணி பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் ஆண்களுக்கு நிகராக தங்களது திறமையை செல்வமாக மாற்றுகிறார்கள். இந்தப் பட்டியலில், இந்திய வீராங்கனைகள் 3 பேர், டாப் 10-ல் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார், அவர்களது சொத்து மதிப்பு என்ன என்று தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த வீராங்கனை யார்?

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பிளானை பயன்படுத்தி வந்த பிரீபெய்ட் பயனர்களுக்கு இனி ₹199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிளானில் 2 GB data, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 SMS தினசரி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாள்கள். முன்னதாக, ₹189 ரீசார்ஜ் பிளான் இன்டர்நெட் தேவையில்லாத பயனர்களுக்கு வசதியாக இருந்தது.

நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் அரையாண்டு விடுமுறை மொத்தமாக வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கில் TN அரசுக்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. TN அரசு ஒரு மாத காலம் அவகாசம் கோரிய நிலையில், மெட்ராஸ் HC நவ.20-ம் தேதி வரை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில், கட்சிகளுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்றும், 15 நாள்களுக்கு முன்பாக அனுமதி கோரினால் 5-7 நாள்களில் முடிவெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை தொடரலாம் என SC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR மேற்கொள்வதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக 2 வாரத்தில் ECI பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும். SIR-க்கு ஆதரவாக இந்த வழக்கில் அதிமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்க SC மறுப்பு தெரிவித்துள்ளது.

காலத்தால் அழியாத பொறியியல் நேர்த்தியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கார்களுக்கு இப்போதுவரை நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கார்களுக்கென தனி அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எங்கெல்லாம் இந்த விண்டேஜ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் இங்கே சென்றுள்ளீர்களா? கமெண்ட் பண்ணுங்க, SHARE பண்ணுங்க.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக 70 டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR CODE உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பிலுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ◈கல்வித்தகுதி: 10, ITI தேர்ச்சி ◈வயது வரம்பு: 18 – 25 ◈சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை ◈விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 24. ◈மேலும் அறிய & விண்ணப்பிக்க <

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷஹீன் ஷாஹித், தீவிரவாத செயல்களை மறைக்க டாக்டராக செயல்பட்டு வந்ததாக உளவுத் தகவல் கூறுகிறது. லக்னோவில் இருந்தபடி அவர், தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்தியாவில் பெண்களை மூளைச்சலவை செய்து ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆள் சேர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.