India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கர்நாடகாவில் மழைப்பொழிவு காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை காவிரியில் இருந்து 1.42 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1.48 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஎஸ்ஆர் அணையில் இருந்து 1.13 லட்சம் கனஅடியும், கபினியில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND, 213/7 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக SKY 58, பண்ட் 49, ஜெய்ஸ்வால் 40 ரன்கள் எடுத்தனர். 214 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SL அணி, 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்தப் போட்டியில் 1.2 ஓவர்களை மட்டுமே வீசிய ரியான் பராக் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த 49 நாள்களில் நடைபெற்றுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ராணுவ வீரர்களின் தொடர் மரணங்களை ஏற்க இயலாது என்றார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஆளும் மத்திய அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி மிரட்டலாக விளையாடி வருகிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் எந்தப்பக்கம் போட்டாலும், இலங்கை தொடக்க வீரர்கள் பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் SIX, FOUR-ஆக விளாசினர். இதனால், இலங்கை 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்துள்ளது. விக்கெட் விழாமல் இதே சூழல் நீடித்தால், இலங்கை எளிதில் வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

*<
*Loginஇல் 12 இலக்க ஆதார் எண், கேப்ட்சாவை பதிவிடவும்.
*செல்ஃபோன் எண்ணுக்கு வரும் OTPஐ பதிவிடவும்
*ஆதார் அப்டேட் ஆப்ஷனை செலக்ட் செய்யவும்
*ADDRESS ஆப்சனை செலக்ட் செய்து, புதிய முகவரியை சமர்பிக்கவும்
*தேவையான ஆவணங்களை உள்ளீடு செய்யவும்
*₹50 கட்டணம் செலுத்தி சமர்பித்தால், முகவரி மாற்றம் தொடர்பான SMS கிடைக்கும்.

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, மதிமுக எம்பி துரை வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 25 தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில், இலங்கை வீரர் கமிண்டு மென்டிஸ் 2 விதமாக பந்துவீசி அசத்தியுள்ளார். 10ஆவது ஓவரில் சூர்யகுமாருக்கு வீசும்போது left-arum orthodox முறையிலும், கில்லுக்கு வீசும்போது right-arm off break முறையிலும் பந்தை வீசினார். கிரிக்கெட்டில் இதுபோன்று வலது மற்றும் இடது கையில் சமமாக பந்துவீசும் திறனை, ஆம்பிடெக்ஸ்டெரிட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய வருமான வரி விதிப்பால், நடுத்தர மக்கள் ₹17,500 வரை சேமிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில், ₹3 லட்சம்(L) வரை 0% வரி, ₹3-₹7 L 5%, ₹7-₹10 L 10%, ₹10-₹12 L 15%, ₹12-₹15 L 20%, ₹15 லட்சத்திற்கும் மேல் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் வரியில் இனி ₹17,500 வரை மிச்சமாகும் என்பதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிஎன்பிஎல் தொடரில் திருச்சி அணி பெற, திருப்பூர் அணி 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் களமிறங்கிய திருப்பூர் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மான் பாஃப்னா 50, கணேஷ் 39 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணியின் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டை வீழ்த்தினார். 170 ரன்கள் இலக்கை நோக்கி திருச்சி அணி விளையாடி வருகிறது.
Sorry, no posts matched your criteria.