News March 26, 2024

டிரெயினிங் எடுக்கும் சிவகார்த்திகேயன்

image

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் ‘SK23’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. பரபரப்புக்கு குறைவில்லாத ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் சிறப்புப் பயிற்சிப் பெற்று வருகிறார். குறிப்பாக, தன் உடம்பை மெருகேற்றுவதற்காக நடிகர் சிம்புவின் ஃபிட்னஸ் டிரெயினரான சந்தீப் மாஸ்டரின் மேற்பார்வையில் ஜிம் ஒர்க் அவுட்களை அவர் செய்துவருகிறார்.

News March 26, 2024

எல்லோராலும் தோனி போல் ஆக முடியாது

image

தோனியை போல எல்லோராலும் 7ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி மேட்ச்சை ஃபினிஷிங் செய்ய முடியாது என்று முகமது ஷமி கூறியுள்ளார். GT அணிக்கு எதிரான போட்டியில் MI அணி 7ஆவது ஆட்டக்காரராக பாண்டியா களமிறங்கியது குறித்து பேசிய முகமது ஷமி, “தோனி அல்லது கோலி இடத்தில் மற்றவரை ஒருபோதும் பொருத்த முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் திறமையை அடிப்படையாக வைத்து விளையாட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

News March 26, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசி நாள்.
*பஞ்சாப்பிற்கு எதிரான பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
*போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து டேவ் கால்ஹவுன் விலகினார்.
*மனித நேய அடிப்படையில் காஸாவில் போர்நிறுத்தம் வேண்டி ஐ.நா., சபையில் ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

News March 26, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (மார்ச் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 26, 2024

இந்தியன் – 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது!

image

கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவான, இந்தியன் 2 & 3 ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது, இந்தியன் 2 படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், கூடிய விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம் இயங்கும் ‘தக் லைஃப்’ படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 26, 2024

விராட் கோலி மீண்டும் சாதனை

image

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், விராட் கோலி சாதனை மேலும் ஒரு படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கோலி, 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என விளாசி அரைசதம் கடந்தார். இதன் முலம் T20 போட்டிகளில் 100 முறை 50க்கும் மேல் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, இது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

News March 26, 2024

மார்ச் 29இல் பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறார். கோவையில் பாஜக சார்பில் போட்டியிட அண்ணாமலை வேட்புமனு செய்துள்ளார். இந்நிலையில் மார்ச்.29இல் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி பல தொகுதிகளுக்கு பயணித்து ஏப்.12ஆம் தேதி, நீலகிரியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். மேலும், ஏப்.1 முதல் 3 வரை, ஏப்.6 முதல் 8 வரை, ஏப்.11,12 ஆகிய தேதிகளில் கோவையில் வாக்குச்சேகரிக்கிறார்.

News March 25, 2024

IPL: பெங்களூரு அணி அபார வெற்றி

image

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணி, தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி & தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிகபட்சமாக கோலி 77 & தினேஷ் 28 ரன்கள், குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

News March 25, 2024

மகன்களை பிரியும் அப்பாக்களுக்கு மட்டும்

image

தனது மகன்களின் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும், மலேசியாவில் படப்பிடிப்பு முடித்து விட்டு, இந்தியா திரும்பும் அவர், ‘சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஒரு மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவத்திற்கு பிறகு எனது உயிர் மற்றும் உலகத்தை காண வீடு திரும்புகிறேன்! பல வாரங்களாக வீட்டில் காத்திருக்கும் அன்பை ஏற்க இனியும் காத்திருக்க முடியாது’ என பதிவிட்டுள்ளார்.

News March 25, 2024

காஸா போர் நிறுத்தத்திற்கு ஐ.நா ஒப்புதல்

image

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஐ.நா பொதுச்செயலர் குட்டரெஸ், ‘காஸாவில் உடனடி போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதை நிச்சயம் நடைமுறைப்படுத்த வேண்டும். தவறினால் மன்னிக்கவே முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!