News March 27, 2024

ராதிகாவை எதிர்த்து பாஜக நிர்வாகி போட்டி

image

விருதுநகர் தொகுதியில் ராதிகாவை எதிர்த்து பாஜக நிர்வாகி வேதா மனுதாக்கல் செய்துள்ளார். அங்கு வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா, கடந்த இரண்டு நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி, டெல்லி மோடி பாஜக அணி என்ற பெயரில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் விருதுநகர் பாஜகவின் கோஷ்டி பூசல் வெளிப்படையாக வெடித்துள்ளது.

News March 27, 2024

ஐபிஎல்லில் அதிக சிக்சர் அடித்தவர்கள்

image

▶கிறிஸ் கெயில் – 357, ▶ரோஹித் ஷர்மா – 258*, ▶ஏ.பி.டிவில்லியர்ஸ் – 251, ▶எம்.எஸ்.தோனி – 239*, ▶விராட் கோலி – 237*, ▶டேவிட் வார்னர் – 228*, ▶கிரண் பொல்லார்ட் – 223, ▶சுரேஷ் ரெய்னா – 203, ▶ஆண்ட்ரே ரசல் – 200*, ▶ஷேன் வாட்சன் – 190, ▶சஞ்சு சாம்சன் – 188*, ▶உத்தப்பா – 182, ▶அம்பதி ராயுடு – 173, ▶கே.எல்.ராகுல் – 170*, ▶க்ளென் மேக்ஸ்வெல் – 158*

News March 27, 2024

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

image

முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 மணியோடு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றிருக்கிறது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 30ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும்.

News March 27, 2024

நாளை தொடங்குகிறது 2ம் கட்ட தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

image

மக்களவை 2ஆவது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் ஒரு தொகுதியில் உள்ள பாதி பகுதிகளுக்கும் ஏப்ரல் 26இல் 2வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 4 கடைசி தேதியாகும். மனு மீது ஏப்.5, ஏப்.6ஆம் தேதிகளில் பரிசீலனை நடைபெறும்.

News March 27, 2024

சித்தார்த் – அதிதி ரகசிய திருமணம்

image

நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. நடிகை அதிதி ராவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர், இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 27, 2024

போபண்ணா ஜோடி அபார வெற்றி

image

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில், போபண்ணா-எப்டன் ஜோடி வெற்றி பெற்றது. நெதர்லாந்தைச் சேர்ந்த வெர்பீக் – ஆஸி.,யைச் சேர்ந்த ஸ்மித் ஜோடிக்கு எதிரான இப்போட்டி, இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்மித் ஜோடி கைப்பற்ற, அடுத்த 2 செட்டுகளையும் 7-6, 10-7 என்ற புள்ளிக் கணக்கில் போபண்ணா ஜோடி கைப்பற்றியது. இதன் மூலம், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

News March 27, 2024

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி 7 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையில், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

News March 27, 2024

காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது

image

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். நீலகிரியில் காவல்துறை அனுமதி பெற்று ஊர்வலம் நடத்த முயன்ற அதிமுக வேட்பாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு சார்பாக நடந்துகொள்வதைப் தேர்தல் ஆணையம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

image

தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டி அக்கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும், அதில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

News March 27, 2024

ஆ.ராசா, திருமா, தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்

image

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அவர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தயாநிதி மாறன் கடந்த 2004, 2009, 2019 தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதேபோல் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், நீலகிரியில் ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

error: Content is protected !!