News July 29, 2024

₹110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

image

குஜராத்தில் கடந்த 2 நாள்களில் ₹110 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க இலாகா துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 26.26 லட்சம் டிரமடோல் போதை மாத்திரைகளும், நேற்று 42.24 லட்சம் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு ₹110 கோடியாகும். மேலும், அகமதாபாத்தில் ஆளில்லா குடோனில் இருந்தும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News July 29, 2024

மின்சார வாகனம் வாங்குவோர் கவனத்திற்கு!

image

மத்திய அரசின் மின்சார இயக்க ஊக்குவிப்புத் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு, மானியத் தொகை கூடுதலாக ₹278 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு ₹10,000, சிறிய மின்சார 3 சக்கர வாகனங்களுக்கு ₹25,000, 3 சக்கர கனரக வாகனங்களுக்கு ₹50,000 மானியமாக வழங்கப்படுகிறது. அதர், பஜாஜ், ஓலா உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவன வாகனங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்படுகிறது.

News July 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 29 | ▶ஆடி – 13 ▶கிழமை: திங்கள் ▶திதி: நவமி ▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 PM – 09:00 PM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News July 29, 2024

அரசே சமஸ்கிருதத்தை திணிப்பதா?: அன்புமணி

image

தமிழகத்தில் தொல்லியல் பணிகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்பது சமஸ்கிருதத் திணிப்பு என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பது தான் அரசின் நிலைப்பாடு என்று இருக்கையில், பின்னர் எப்படி அம்மொழியில் பட்டம் பெற்றவர்கள் தமிழகத்தில் இருப்பார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் TNPSC அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளார்.

News July 29, 2024

இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தம்?

image

பயனாளர்களை தகவல்களை அரசிடம் பகிர கூறி கட்டாயப்படுத்துவதால், இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என ராஜ்ய சபாவில் காங்., உறுப்பினர் விவேக் டன்கா கேள்வி எழுப்பினார். இது குறித்து அந்நிறுவனம் எவ்வித தகவலையும் அரசிடம் பகிரவில்லை எனவும், நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் பயனாளர்களின் தகவல்களை பகிர சொல்லி கேட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

News July 29, 2024

இது தமிழ்நாடா கொலை நாடா?: பிரேமலதா

image

அடுத்தடுத்து 4 படுகொலைகள் நடந்துள்ளதாக கூறி, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிவிட்டதாகவும், டாஸ்மாக், கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகரித்திருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கி, கொலை நாடாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 29, 2024

நேதாஜி பொன்மொழிகள்

image

➤சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை. எடுக்கப்படுகிறது. ➤கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். ➤ஒரு சிந்தனைக்காக மனிதன் இறக்கலாம். ஆனால் அவனது சிந்தனைகள் அதன் பின் 1000 பேரிடம் செல்லும். ➤போராட்டம் இல்லாத வாழ்க்கை போர் அடித்து விடும். ➤நம்மை அடிமைதனத்திலேயே வைத்திருக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை. ➤தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதியுடையவன்.

News July 29, 2024

தந்தையின் கண்களை பார்க்கவே பயம்: ரன்பிர் கபூர்

image

சிறுவயதில் தந்தையை பார்க்கவே பயமாக இருந்ததால், அவரது கண்களை பார்த்ததே இல்லை என பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார். பெரிய பங்களா வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிடும் சத்தத்தை மாடிப்படியில் உட்கார்ந்து கேட்டதாகவும், தந்தை ஒருமுறை கூட தனது கையை பிடித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீதிருந்த அன்பை தந்தை ரிஷி கபூர் வெளிக்காட்ட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

News July 29, 2024

இஸ்ரேலுக்குள் நுழைவோம்: துருக்கி அதிபர்

image

பாலஸ்தீனத்திற்கு எதிராக தொடர்ந்து அத்துமீறினால், லிபியாவைப் போல் இஸ்ரேலுக்குள் துருக்கி ராணுவம் நுழையும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் எச்சரித்துள்ளார். இதை செய்யாமல் இருக்க எந்த காரணமும் இல்லை எனவும், இந்நேரத்தில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளிடம் அவர் உரையாற்றினார். கடந்த 2020ல் ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய அரசுக்கு ஆதரவளிக்க, துருக்கி தனது ராணுவத்தை அனுப்பியது.

News July 29, 2024

மாலத்தீவு அமைச்சர் இந்தியா வருகை

image

மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் ஃபைசல் இன்று இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியா- மாலத்தீவு இடையேயான சுற்றுலா சார்ந்த உறவை மேம்படுத்தும் வகையில் டெல்லி உள்ளிட்ட 3 நகரங்களில் மெகா ரோடு ஷோவை தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

error: Content is protected !!