News July 29, 2024

தாமதமின்றி மாணவர்களுக்கு உறுதி சான்றிதழ் தர உத்தரவு

image

மாணவர்களுக்கு கால தாமதமின்றி உறுதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6- 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர ஏதுவாக, அந்தந்த பள்ளிகள் உறுதிச் சான்றிதழ் தர வேண்டும். ஆனால், சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News July 29, 2024

கணிக்க முடியாத வகையில் பந்துவீச்சு: ரவி பிஷ்னோய்

image

கம்பீர் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத வகையில் பந்தை வீசுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என்ற அவர், எது சரியாக வருகிறதோ அதனை போட்டிகளில் செயல்படுத்த முயற்சிப்பேன் என்றார். இலங்கைக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அவர் 3 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

News July 29, 2024

கானா பாடிய சுதா ரகுநாதன் கீர்த்தனை பாடிய தேவா

image

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘போட்’ படத்திற்கு
ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். இசையில் எக்ஸ்பிரிமென்ட் செய்யும் அவர், இந்தப் படத்திலும் அப்படியொன்றை செய்திருக்கிறார். அதாவது, கர்நாடக சங்கீதத்தில், இசைப் பாடகி சுதா ரகுநாதன் வடசென்னையின் கானா பாடலை பாட வைத்துள்ள அவர், இசையமைப்பாளர் தேவாவை வைத்து கானா மெட்டில் கர்நாடக சங்கீத கீர்த்தனையை பாட வைத்திருக்கிறாராம்.

News July 29, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகங்கள், வெளியே செல்வோர் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

News July 29, 2024

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம்

image

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்யவும், ஈட்டிய விடுப்பு, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

News July 29, 2024

OLYMPICS DAY 4: ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் & வில்வித்தை ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். துப்பாக்கி சுடுதலில் பிரித்விராஜ் தொண்டைமானும், பேட்மிண்டனில் சாத்விக் ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடியும் களமிறங்க உள்ளனர். 10 மீ., ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டாலும், அர்ஜூனும் சிறப்பாக செயல்பட்டால் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

News July 29, 2024

தமிழகத்திற்கு புதிய ஆளுநரா?

image

தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழகத்திற்கான புதிய ஆளுநர் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா? அல்லது ஆர்.என்.ரவி மீண்டும் தொடருவாரா? என்ற கேள்வி எழுகிறது.

News July 29, 2024

சித்தராமையாவுக்கு நிதியமைச்சர் பதிலடி

image

காங்கிரஸ் ஆட்சியை விட, கர்நாடகாவுக்கு பாஜக அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சியில் ₹60,779 கோடி மானியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ₹2,39,955 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பதவி மீது உள்ள ஆசையால் ஆந்திரா, பிஹாரை தவிர பிற மாநிலங்கள் மோடியின் கண்களுக்கு தெரியவில்லை என்று சித்தராமையா விமர்சித்திருந்தார்.

News July 29, 2024

ஆடி கார்த்திகையில் கந்தனை வணங்கினால்…

image

சக்தி வழிபாட்டு மாதமாக கருதப்படும் ஆடிக் கார்த்திகையில் (இன்று) தமிழ் கடவுள் முருகனுக்கு விரதமிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் நீராடி, திருநீறு பூசி, வீட்டிலேயே விரதமிருந்து, மாலை வடிவேலவர் கோயிலுக்கு சென்று, பால் அபிஷேகம் செய்து, செவ்வரளி மாலையிட்டு, தேன் தினை மா படைத்து, சஷ்டி கவசம் பாடி வணங்கினால் வேண்டிய வரங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம்.

News July 29, 2024

தோல்விக்கு மழையே முக்கிய காரணம்: சரித் அசலங்கா

image

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மழை முக்கிய காரணமாக இருந்ததாக இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார். மைதானத்தின் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்ததும், தாங்கள் சரியாக பேட்டிங் செய்யாததுமே இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அணி 161 ரன்கள் எடுத்த நிலையில், மழை காரணமாக இந்திய அணிக்கு 8 ஓவரில் 78 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

error: Content is protected !!