India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பை தொடர்ந்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. கடந்த பிப்.15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடந்த இத்தேர்வை, 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கோவை, திருப்பூர் மற்றும் குமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதர மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ., முதல் 40 கி.மீ வரை) மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுக்கு பிறகு செங்கோட்டையன், வேலுமணி தலைமையில் அதிமுக இயங்குமென அமைச்சர் ரகுபதி பேசியிருந்தார். இதற்கு இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் எந்த சலசலப்போ, பிளவோ இல்லை. அவரின் தலைமையில்தான் அதிமுக இயங்கும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். 40 ஆண்டுகளாக நேர்வழியில் அரசியல் செய்து வரும் என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERs) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிறுவனங்கள் +2 முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான BS–MS எனும் இரட்டைப் பட்டப்படிப்பினை வழங்கி வருகிறது.
+1 பொதுத்தேர்வு முடிவு நாளை காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இரு இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம். பதிவு செய்துள்ள செல்ஃபோன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.
அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சொல்ல மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது. தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் கெஜ்ரிவால், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
1970களில் இந்திய சாலைகளில் வலம் வந்த ‘ராஜ்டூட்’ பைக்குகள் மீண்டும் சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த பைக்கை பழைய டிசைனில் நவீன வசதிகளுடன் சந்தைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 125CC இஞ்சினுடன் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பைக் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தெலங்கானா மாநிலம் கோடங்கலில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். ஆந்திர மாநிலம் இந்துப்பூரம் தொகுதியின் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரும், நடிகருமான பாலகிருஷ்ணா தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், அமைச்சருமான ரோஜா, கணவர் செல்வமணி உடன் வந்து வாக்களித்தார்.
உலகின் சுவையான சிக்கன் உணவுகளின் பட்டியலை tasteatlas வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கொரியன் fried சிக்கன் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் உணவுகள் 3 இடங்களை பிடித்துள்ளன. அதன்படி, பட்டர் சிக்கன் 2ஆவது இடத்தையும், சிக்கன் டிக்கா 3ஆவது இடத்தையும், சிக்கன் 65 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பெருவின் ரோஸ்ட் சிக்கன் 4ஆவது இடத்தையும், மலேசியாவின் அயம் கோரெங் 5ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடந்து அங்கிருந்த சமையல் கூடத்தில் உணவு சமைத்த அவர், அதனை பக்தர்களுக்கும் பரிமாறினார். மக்களவைத் தேர்தலையொட்டி, அவர் நூற்றுக்கணக்கான கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பிஹாருக்கு சென்ற பிரதமர், சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.