News March 26, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர் – கிருஷ்ணசாமி
*சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு.
*லெபனான் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா சாம்பியன் பட்டம் வென்றார். *அமுல் பால் பொருட்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
*மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடவுள்ளார்.

News March 26, 2024

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அகுலா சாம்பியன்

image

லெபனான் உலக டேபிள் டென்னிஸ் ஃபீடர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். பெய்ரூட்டில் நேற்று நடந்த மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் ஸ்ரீஜா அகுலா, லக்ஸம்பர்க்கின் சாராவுடன் மோதினார். ஆட்டத்தின் முடிவில் ஸ்ரீஜா 6-11, 12-10, 11-5, 11-9 என்ற கேம் கணக்கில் சாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இது ஸ்ரீஜா வெல்லும் 2ஆவது WTT பட்டமாகும்.

News March 26, 2024

விளக்கம் சொன்ன துல்கர்… ஆரத்தழுவிய கமல்!

image

கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் ‘தக் ஃலைப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை கமலை நேரில் சந்தித்து விளக்கிச் சொல்ல துல்கர் சல்மான் நினைத்து இருக்கிறார். இதற்காக கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வந்த அவரை, கமல் அன்போடு ஆரத்தழுவி வழியனுப்பியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News March 26, 2024

10 லட்சம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?

image

ரபா நகரில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “ரபா நகருக்குள் முன்னேறி தாக்குதலை தொடங்கினால், இஸ்ரேலுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும். 10 லட்சம் மக்கள் வெளியேற வழி இல்லாமல் தவிக்கும் ரபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது மிகப்பெரிய தவறு” எனக் கூறியுள்ளார்.

News March 26, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் – 26 | பங்குனி – 13
▶கிழமை: செவ்வாய் | ▶திதி: அதிதி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: மாலை 03:00 – 04:30 வரை
▶எமகண்டம்: காலை 09:00 – 10:30 வரை
▶குளிகை: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 26, 2024

தேர்வுக் குழுவுக்கு பதிலடி தந்த கோலி

image

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழுவுக்கு மறைமுக பதிலடியை விராட் கோலி கொடுத்துள்ளார். விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர், “இப்போதும் என்னிடம் அதே திறமை இருப்பதாக நான் யூகிக்கிறேன். டி20 கிரிக்கெட் விளம்பரத்திற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இப்போது என் பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். கடந்த 2 மாதங்கள் சாதாரணமாக என்னை நானே உணர வாய்ப்பு கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

News March 26, 2024

தமிழகத்தின் கலகக்குரல் அதிர்வலையை உருவாக்கும்

image

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான எழும் கலகக்குரல் நாடு முழுவதும் அதிர்வலையை உருவாக்கும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நாங்குநேரியில் பேசிய அவர், “மக்களைப் பற்றி சிந்திக்காமல் பாஜக அரசு செயல்படுகிறது. பாசிச, மதவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காக்கவும் சமூகநீதியை நிலைநாட்டவும் I.N.D.I.A கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

News March 26, 2024

மகளிர் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

image

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹரேந்திர சிங் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அணிக்கு புத்துயிர் அளிக்க அவர் மிகவும் பொருத்தமான நபராக இருப்பார் என்று தேசிய கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கருதுகிறது. சம்பள நிறுத்தம் போன்ற காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நெதர்லாந்தின் ஜான்னேக் கடந்த மாதம் விலகிய குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

கல்லீரலை காக்கும் அகத்திப்பூ கசாயம்

image

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த (Detox) அகத்திப்பூ கசாயம் பருகலாம் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி அகத்திப்பூவை சுத்தப்படுத்தி, மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும். எலுமிச்சைச் சாறு கலந்து, இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடித்து வந்தால் போதும், கல்லீரலில் உள்ள நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

News March 26, 2024

கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரம்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரத்தை ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அவர் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ‘மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்ற தலைப்புடன், கெஜ்ரிவால் சிறைக்கு பின்னால் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைத்து பலரும் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!