News July 9, 2025

பிரபல நடிகர் டேவிட் கில்லிக் மரணம்!

image

பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் கில்லிக்(87) காலமானார். வயது மூப்பின் காரணமாக இவர் லண்டனில் உள்ள ஹாஸ்பிடலில் மரணமடைந்துள்ளார். கிட்டத்தட்ட 6 தசாப்தங்களாக நடித்து வரும் இவர், அண்மையில் ரசிகர்களை ஈர்த்த ‘The Crown’ வெப்தொடர், ‘In A Touch of Frost’, ‘A Bridge Too Far’ போன்ற மெகா ஹிட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News July 8, 2025

இபிஎஸ், செங்கோட்டையன் இடையே மீண்டும் மோதலா?

image

2026 தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார் இபிஎஸ். கோவையில் பரப்புரையை தொடங்கியபோது, அவருடன் செங்கோட்டையன் இல்லாததது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த பிரச்னை சுமுகமாக முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பனிப்போர் தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது. அதேநேரத்தில், ஈரோட்டுக்கு இபிஎஸ் பரப்புரைக்கு செல்லும்போது, செங்கோட்டையன் உடனிருப்பார் என சொல்லப்படுகிறது. எது உண்மையோ?

News July 8, 2025

தமிழ் சினிமாவில் மமிதா பைஜுவின் ஆதிக்கம்

image

‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மமிதா தற்போது தமிழில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். விஜய் தொடங்கி தனுஷ் வரை முக்கிய ஹீரோக்களின் படத்தில் ஃபர்ஸ்ட் புக் செய்யப்படும் நடிகை மமிதா தான். விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் 46-வது படம், பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டாம் வானம்’, தனுஷின் புதிய படம் உள்ளிட்ட 5 முக்கிய நடிகர்களின் படங்களில் மமிதா நடிக்கிறார்.

News July 8, 2025

இந்த பெண்ணுக்கு 16-ம் தேதி தூக்கு தண்டனை

image

ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

image

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்.

News July 8, 2025

வேன் விபத்து… பள்ளிக்கு பறந்த திடீர் நோட்டீஸ்

image

கடலூர் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளான தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்துக்குள்ளான வேனில் உதவியாளர் இல்லாதது தெரியவந்துள்ளது. ஆனால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் இருக்க வேண்டியது கட்டாயம். உதவியாளர் இல்லாமல் வேனை இயக்கியது ஏன் என விளக்கம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளின் பள்ளி வாகனத்தில் உதவியாளர் இருக்கிறார்களா என பாருங்கள் பெற்றோரே..!

News July 8, 2025

குபேரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

image

தனுஷ், நாகார்ஜூனா, ரஷ்மிகா கூட்டணியில் உருவான ‘குபேரா’ படம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 20-ம் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் र100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன்பின், வேறு படங்கள் ரிலீஸான நிலையில், குபேராவின் வசூல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், இதுவரையான 18 நாள்களில் குபேராவின் உலகளாவிய வசூல் र134.25 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News July 8, 2025

ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

image

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.

News July 8, 2025

மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

image

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள்!

News July 8, 2025

ரூபாய் நோட்டு அச்சிட இதெல்லாம் பாக்கணும்

image

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை பின்வரும் காரணிகள் அடிப்படையில் தான் கணக்கிட்டு அச்சடிக்கிறது: *பழைய நோட்டுகளை அகற்றுதல் *மாற்றீடு செய்யும் தேவை *இருப்பு தேவை *பொருளாதார வளர்ச்சி விகிதம் *உற்பத்தி விகிதம் *கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை தடுத்தல் *தங்கம் இருப்பு உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து, எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.

error: Content is protected !!