India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு சாதகமான அலை வீசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். லடாக்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி அலை வீசுவதால் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றார். வழக்கில் இருந்து கெஜ்ரிவால் இன்னும் விடுபடவில்லை என்பதால், அவரை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடிகர் தனுஷ் ₹1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இக்கட்டடத்தை கட்டி முடிக்க, ₹40 கோடி தேவைப்படுவதாக அண்மையில் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் ₹1 கோடி நிதியுதவி வழங்கினார். அந்த வரிசையில் தற்போது தனுஷும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி பாஜக வேட்பாளர் மாதவி லதா சோதனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மாதவி லதா மீது 171C, 186, 505(1)(c) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற பிறகு, குழந்தைகளுடனான உரையாடல் பெற்றோர் மத்தியில் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தையாக இருக்கும்போது தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டுத் தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். ஆனால், அடுத்த தலைமுறையிடம் செல்போனை கொடுத்து, அதற்கான வாய்ப்பை நாம் பறித்து விடுகிறோம். ஆனால், கதை கேட்கும்போது குழந்தைகளின் கற்பனைத் திறன் அபரிமிதமாக வளரும்.
பாஜக ஆட்சியில் நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் முசாபர்பூரில் பிரசாரம் செய்த அவர், பலவீனமான காங்., ஆட்சியை நாடு விரும்பவில்லை என்றார். காங்கிரஸ் ஆட்சியில் மாதம் ₹30,000 சம்பாதித்தாலும் வருமான வரி கட்ட வேண்டும் எனவும், தற்போது மாதம் ₹50,000 சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டியதில்லை என்ற வரி சீர்திருத்தத்தை பாஜக ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேறும் சூழலில் குஜராத் அணி விளையாடவுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றவர்கள், இந்த ஆண்டு வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெற்ற நிலையில் அதே காரணங்களுக்காக தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று சோரன் மனு அளித்திருந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. முன்னதாக, தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பணியாற்றுவோம் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அவர், நம் நாடு பல ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், காங்கிரசிடமும் சிக்கி இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பிறகுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும் தடாலடியாக தெரிவித்தார்.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பீன்ஸ் ₹200 – ₹230க்கும், பச்சை மிளகாய் ₹70க்கும், அவரைக்காய் ₹90 – ₹110க்கும், கேரட் ₹50 – ₹70க்கும், பூண்டு ₹250க்கும், சேனைக்கிழங்கு ₹70க்கும், சின்ன வெங்காயம் ₹62க்கும், தேங்காய் ₹35க்கும், இஞ்சி ₹130க்கும் விற்பனையாகிறது.
மே 18ஆம் தேதி நடைபெறும் சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கவனம் ஈர்த்து வருகிறது. லக்னோ அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட RCB – CSK போட்டி Knockout போட்டியாக மாறிவிடும். அப்போட்டியில் RCB அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்., அல்லது 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும். இது நடக்காவிட்டால் CSK அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
Sorry, no posts matched your criteria.