News March 26, 2024

OTT-இல் வெளியாகும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

image

‘குணா’ குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

News March 26, 2024

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை

image

மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

News March 26, 2024

முருகன், ஜெயக்குமார் இலங்கை செல்ல பாஸ்போர்ட்

image

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் கூறியுள்ளது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்த ஒரு வாரத்தில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து, முருகன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

News March 26, 2024

தோனி, ஜடேஜா வரிசையில் இணைந்த தினேஷ் கார்த்திக்

image

பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தினேஷ் கார்த்திக் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 28* ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் ஐபிஎல்லில் வெற்றிகரமான சேஸிங்கில் அவுட்டாகாத வீரர்கள் வரிசையில், தினேஷ் கார்த்தி (23 முறை) 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் தோனியும், ஜடேஜாவும் (தலா 27 முறை) உள்ளனர்.

News March 26, 2024

அதிமுக வேட்பாளரிடம் ₹648 கோடி சொத்து

image

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் மொத்தம் ₹648 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அசோக்குமார் பெயரில் ₹526 கோடிக்கு அசையும் சொத்து, ₹57 கோடிக்கு அசையா சொத்து மற்றும் மனைவி கருணாம்பிகா பெயரில் ₹47 கோடிக்கு அசையும் சொத்து, ₹22 கோடிக்கு அசையா சொத்தும் உள்ளன. இவர் பாஜக MLA சரஸ்வதி மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

ரூ.648 கோடி சொத்து இருந்தும் கார் இல்லாத வேட்பாளர்

image

ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார் ரூ.648 கோடி சொத்து வைத்துள்ளார். ஆனால், அவருக்கும், அவரின் மனைவிக்கும் சொந்தமாக ஒரு கார், இருசக்கர வாகனம் கூட இல்லை. அசோக்குமாரின் அசையும் சொத்துகள் பெரும்பாலானவை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் வைப்பீட்டு தொகையாகவே உள்ளன. அசோக்குமார் மற்றும் அவரது மனைவியிடம் தலா 10 கிலோ தங்கம் ( மொத்தம் 20 கிலோ) இருக்கிறது.

News March 26, 2024

இதனால் தான் ஹிந்திப் படங்களில் நடிக்கவில்லை

image

ஹிந்திப் படங்களில் நடிக்காதது குறித்து நடிகை த்ரிஷா மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “2010இல் அக்ஷய் குமார் உடன் நடித்தது தான் எனது முதலும் கடைசியுமான பாலிவுட் படம். அந்தப் படம் தோல்வி அடைந்ததால் பாலிவுட்டிலிருந்து விலகி விட்டேன் என்று செய்திகள் பரவியது. ஆனால் மும்பைக்கு என் இருப்பிடத்தை மாற்ற தயாராக இல்லை. அதனால் தான் ஹிந்திப் படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை” என்றார்.

News March 26, 2024

2,049 காலிப் பணியிடங்கள். இன்றே கடைசி நாள்

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெக்னிக்கல் ஆபரேட்டர், நர்சிங் ஆபிசர், ஜூனியர் இன்ஜினியர்ஸ், லேப் உதவியாளர், புகைப்பட கலைஞர், நூலக உதவியாளர், கிளர்க் உள்ளிட்ட 2,049 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10, 12 மற்றும் டிகிரி படித்தவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இன்றே கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.

News March 26, 2024

BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்

image

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கி.மீ., தூரம் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மிகப்பெரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News March 26, 2024

இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் உயர்வு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதன்படி ரூபாயின் மதிப்பு 29 பைசா அதிகரித்து ₹83.32 ஆக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 48 பைசா வரையில் ரூபாயின் மதிப்பு சரிந்து ₹83.61ஆக இருந்தது. இந்நிலையில், இன்றைய இண்ட்ரா டே வர்த்தகத்தின் தொடக்கத்தில் உள்நாட்டு மதிப்பு, ₹83.32 ஆக தொடங்கியுள்ளது.

error: Content is protected !!