News March 26, 2024

ரூ.1000.. குடும்ப தலைவிகளுக்கு புதிய சர்ப்ரைஸ்

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் செய்தியை உதயநிதி வெளியிட்டுள்ளார். தி.மலையில் தேர்தல் பரப்புரையின்போது, மகளிர் உரிமைத் திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் உள்ள சின்ன சின்ன குறைப்பாடுகள் களையப்படும். தேர்தல் முடிந்ததும் இதுவரை 1000 ரூபாய் வாங்காத பெண்களுக்கும் வழங்கப்படும் என்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

News March 26, 2024

புதுப்புது யுக்திகளை கையாளும் உதயநிதி

image

தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினரை விமர்சிக்க புதுப்புது யுக்திகளை கையாளுகிறார். கடந்த ஒரு வாரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை பரப்புக்கு பயன்படுத்திய அவர், தற்போது பிரதமர் மோடி உடன் இபிஎஸ் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

News March 26, 2024

CSKvsGT: முதலிடத்தை பிடிக்கப் போவது யார்?

image

குஜராத் – சென்னை இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு நடைபெற உள்ளது. புதிய மற்றும் இளம் கேப்டன்களை கொண்ட 2 பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், புள்ளிப் பட்டியலில் யார் முதலிடத்தை பிடிக்க போவது என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்கும். இதற்காக சென்னை மற்றும் குஜராத் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 26, 2024

“ED, Income tax, CBI-ஐ வைத்து அச்சுறுத்தும் மோடி

image

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடிக்கு பயந்து பிரதமர் மோடியை எதிர்க்க வட மாநிலத் தலைவர்கள் தயங்குகிறார்கள் என்று நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழ் மொழி, தமிழ்நாட்டை காப்பாற்றுவது மட்டுமின்றி இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது எனத் தெரிவித்தார்.

News March 26, 2024

மைக்ரோசாஃப்ட் உயர்பதவியில் சென்னை ஐஐடி மாணவர்

image

சென்னை ஐஐடியில் படித்த பவன் தவுலூரி என்பவர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரிவு தலைவராக இருந்த பனோல் பனய் பதவி விலகி அமேசானில் சேர்ந்ததை தொடர்ந்து, தவுலூரி நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளாவை தொடர்ந்து, இவர் அமெரிக்காவின் உயர்தொழில்நுட்ப நிறுவன தலைவராகியுள்ளார்.

News March 26, 2024

பொதுமக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது

image

தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், அம்மை, போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், இடம், தொலைபேசி எண், தொற்று விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் எந்த தொற்றையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

News March 26, 2024

OTT-இல் வெளியாகும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

image

‘குணா’ குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

News March 26, 2024

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை

image

மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

News March 26, 2024

முருகன், ஜெயக்குமார் இலங்கை செல்ல பாஸ்போர்ட்

image

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் கூறியுள்ளது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்த ஒரு வாரத்தில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து, முருகன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

News March 26, 2024

தோனி, ஜடேஜா வரிசையில் இணைந்த தினேஷ் கார்த்திக்

image

பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், தினேஷ் கார்த்திக் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 28* ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் ஐபிஎல்லில் வெற்றிகரமான சேஸிங்கில் அவுட்டாகாத வீரர்கள் வரிசையில், தினேஷ் கார்த்தி (23 முறை) 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் தோனியும், ஜடேஜாவும் (தலா 27 முறை) உள்ளனர்.

error: Content is protected !!