India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை என்பதால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதாகவும், தற்போது சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ₹100 குறைத்துள்ளது தேர்தல் நாடகம் என்றும் விமர்சித்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ₹500 உயர்த்தி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோர காவல்படை நடத்திய நீர் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். மணிலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘பிலிப்பைன்ஸ் தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கு இந்தியாவின் முழு ஆதரவு உறுதியாக இருக்கும்’ என்றார்.
ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல், நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடலில், ராம் சரண் டான்ஸ் இடம்பெற்றிருக்கும் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ‘பார்டர் கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ▶முதல் டெஸ்ட் போட்டி, நவ.22-26, ▶2ஆவது டெஸ்ட் போட்டி, டிச.6-10, ▶3ஆவது டெஸ்ட் போட்டி, டிச.14-18, ▶4ஆவது டெஸ்ட் போட்டி, டிச.26-30, ▶5ஆவது டெஸ்ட் போட்டி, 2025 ஜன.3-7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.
மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ள ‘லவ்வர்’ திரைப்படம், நாளை (மார்ச் 27) ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. தற்கால தலைமுறையின் காதல் பிரச்னைகளை குறித்து பேசியிருக்கும் இப்படம், இளம் வயதினர்களை அதிகம் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கோடை விடுமுறையை குறிவைத்து முறைகேடாக முன்பதிவு செய்து விற்று வரும் நபர்களை ஆர்.பி.எஃப் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில கணினி மைய ஊழியர்கள், ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு (மார்ச் 31 வரை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய வேளைகளில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், தனது பெயரில் ₹27 கோடி அசையும் சொத்துகள், ₹26 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகவும், சரத்குமார் பெயரில் ₹8 கோடி அசையும் சொத்துகள், ₹21 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வருமான வரி பாக்கி போன்றவை ₹6 கோடி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், இடுப்பு உயர No Ball-களை துல்லியமாக கணிக்க பிசிசிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களின் முழு உயரம் மற்றும் இடுப்பு உயரத்தை கணக்கிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்த விவரங்களை டிவி ஆபரேட்டர்களால் பயன்படுத்தப்படும் ‘Hawk-Eye’ தொழில்நுட்பத்தில் இணைத்துவிட்டால், இடுப்பு உயர No Ball-களை 3ஆவது நடுவரால் துல்லியமாக கணிக்க முடியும்.
கருங்காலி மாலை அணிவதில் எந்த நம்பிக்கையும் இல்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இனிமேல் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், “எனது நண்பர் வாங்கி கொடுத்ததால் இந்த மாலையை அணிந்துள்ளேன். மற்றபடி இதில் எந்த நம்பிக்கையும் இல்லை. இதை அணிந்து கொண்டால் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி குறையும் எனக் கூறி நண்பர் தான் இதை அணிவித்தார். மறுக்க முடியாததால் அதை போட்டுள்ளேன்” என்றார்.
Sorry, no posts matched your criteria.