India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலதிபர் அதானி பலனடையவே அக்னிவீர் திட்டத்தை மோடி கொண்டு வந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அக்னிவீர் திட்டத்தை நாட்டில் பிரதமர் மோடியும், அவரது அலுவலகமும் கட்டாயப்படுத்தி திணித்து இருப்பதாக விமர்சித்தார். ராணுவத்தினருக்கான பென்சன், கேண்டின் கான்டிராக்ட் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதானிக்கு செல்ல மோடி விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்யக் கூடும். இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மக்களவைக்கான 4ஆம் கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.60% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு இன்று 4ஆவது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. காலையில் தேர்தல் தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களிக்கின்றனர். மதியம் 3 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 66% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்திய பங்குச்சந்தைகளில் ஜுன் 4க்கு பிறகு வர்த்தகம் வேகமெடுக்குமென்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை 0.7 சதவீதம் சரிந்தது குறித்து பேட்டியளித்த அவர், பங்குச்சந்தைகள் இதற்கு முன்பும் பல முறை சரிவை சந்தித்திருப்பதாகவும், அதனால், மக்களவைத் தேர்தலுடன் அதை தொடர்புபடுத்த வேண்டாம், ஜுன் 4க்கு முன்பு பங்குகளை வாங்கிக் கொள்ளூங்கள் என்றார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பியும், டெல்லி முன்னாள் மகளிர் ஆணைய தலைவியுமான ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் இல்லத்தில் வைத்து அவர் தாக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்ததாகவும், பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த அவர், திரும்பிச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும். <
அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதிப்பது குறித்து, ஆளுநர் மாளிகை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ராஜ்பவன் விளக்கமளித்துள்ளது. அண்ணாமலை மீது, பியூஸ் மானுஷ் என்பவர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், மேல்நடவடிக்கைக்கு ராஜ்பவன் அனுமதி அளித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ராஜ்பவன், அதுபோன்ற செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.
தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயல் குறித்து அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். தான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றும், பாஜக திட்டமிட்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை சிதைக்க முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்செயல்கள் அனைத்தும் அசாதுதீன் ஓவைசிக்கு உதவப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன் என்று மோடி தெரிவித்துள்ளார். பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வாக்குகளுக்காக திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸும், ஆர்ஜேடி கட்சியும் செய்வதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும் விமர்சித்தார். முஸ்லிம்களுக்கே நாட்டின் சொத்துக்கள் மீது முதல் உரிமை உள்ளதென காங்கிரஸ் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி , கோடை வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மழை பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.