News July 31, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤வயநாடு சுற்றுலா சென்றுள்ள தமிழர்கள், 1070 என்ற இலவச உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ➤பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ➤தமிழகத்தில் சிக்கன்குனியா காய்ச்சலால் இதுவரை 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ➤இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

News July 31, 2024

இன்றே கடைசி: 8,326 அரசு பணியிடங்கள்

image

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ssc.nic.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆக.10, 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

News July 31, 2024

வெள்ள தடுப்பு பணிகள்: அமைச்சர் உத்தரவு

image

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே விரைந்து முடிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வெள்ள தடுப்பு பணிகள், தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரிகள் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில், உத்தரவிடப்பட்டுள்ளது.

News July 31, 2024

8 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு

image

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை – 31 | ▶ஆடி – 15 ▶கிழமை: புதன் ▶திதி: ஏகாதசி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News July 31, 2024

100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்த நிதி: காங்.,

image

100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு படிப்படியாக நிதியை புறக்கணித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ₹98,467 கோடியாக ஒதுக்கப்பட்ட நிதி, தற்போதைய பட்ஜெட்டில் ₹86,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த பட்ஜெட்டில் 1.78% மட்டுமே நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News July 31, 2024

முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

image

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று, முன் கூட்டியே கிளம்பிச் சென்ற போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நரம்பியல் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News July 31, 2024

நிவாரண நிதி அறிவித்த முதல்வர்

image

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் காளிதாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நீலகிரியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

News July 31, 2024

ரூமியின் பொன்மொழிகள்

image

➤எந்த ஆழமான கேள்வியின் உள்ளேயும் பதில் உள்ளது. ➤நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். ➤பயணம் உங்கள் வாழ்க்கையில் ஆற்றலையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது. ➤வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். ➤உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். ➤நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.

News July 31, 2024

இந்த வாரம் வெளியாகும் படங்கள்

image

ஆகஸ்ட் 2ஆம் தேதி 4 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. யோகிபாபு நடிப்பில் சிம்பு தேவன் இயக்கியுள்ள ‘போட்’, விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’, பாரி இளங்கோவன் இயக்கி நடித்துள்ள ‘ஜமா’ மற்றும் நடிகை காயத்ரி, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திகில் படமான ‘பேச்சி’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!