News March 26, 2024

அதிமுக வேட்பாளரிடம் ₹648 கோடி சொத்து

image

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் மொத்தம் ₹648 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அசோக்குமார் பெயரில் ₹526 கோடிக்கு அசையும் சொத்து, ₹57 கோடிக்கு அசையா சொத்து மற்றும் மனைவி கருணாம்பிகா பெயரில் ₹47 கோடிக்கு அசையும் சொத்து, ₹22 கோடிக்கு அசையா சொத்தும் உள்ளன. இவர் பாஜக MLA சரஸ்வதி மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2024

ரூ.648 கோடி சொத்து இருந்தும் கார் இல்லாத வேட்பாளர்

image

ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார் ரூ.648 கோடி சொத்து வைத்துள்ளார். ஆனால், அவருக்கும், அவரின் மனைவிக்கும் சொந்தமாக ஒரு கார், இருசக்கர வாகனம் கூட இல்லை. அசோக்குமாரின் அசையும் சொத்துகள் பெரும்பாலானவை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் வைப்பீட்டு தொகையாகவே உள்ளன. அசோக்குமார் மற்றும் அவரது மனைவியிடம் தலா 10 கிலோ தங்கம் ( மொத்தம் 20 கிலோ) இருக்கிறது.

News March 26, 2024

இதனால் தான் ஹிந்திப் படங்களில் நடிக்கவில்லை

image

ஹிந்திப் படங்களில் நடிக்காதது குறித்து நடிகை த்ரிஷா மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “2010இல் அக்ஷய் குமார் உடன் நடித்தது தான் எனது முதலும் கடைசியுமான பாலிவுட் படம். அந்தப் படம் தோல்வி அடைந்ததால் பாலிவுட்டிலிருந்து விலகி விட்டேன் என்று செய்திகள் பரவியது. ஆனால் மும்பைக்கு என் இருப்பிடத்தை மாற்ற தயாராக இல்லை. அதனால் தான் ஹிந்திப் படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை” என்றார்.

News March 26, 2024

2,049 காலிப் பணியிடங்கள். இன்றே கடைசி நாள்

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெக்னிக்கல் ஆபரேட்டர், நர்சிங் ஆபிசர், ஜூனியர் இன்ஜினியர்ஸ், லேப் உதவியாளர், புகைப்பட கலைஞர், நூலக உதவியாளர், கிளர்க் உள்ளிட்ட 2,049 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10, 12 மற்றும் டிகிரி படித்தவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இன்றே கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.

News March 26, 2024

BREAKING: தமிழகத்தில் நிலநடுக்கம்

image

தமிழ்நாட்டில் சமீபகாலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி 20 கி.மீ., தூரம் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மிகப்பெரிய சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News March 26, 2024

இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் உயர்வு

image

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதன்படி ரூபாயின் மதிப்பு 29 பைசா அதிகரித்து ₹83.32 ஆக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 48 பைசா வரையில் ரூபாயின் மதிப்பு சரிந்து ₹83.61ஆக இருந்தது. இந்நிலையில், இன்றைய இண்ட்ரா டே வர்த்தகத்தின் தொடக்கத்தில் உள்நாட்டு மதிப்பு, ₹83.32 ஆக தொடங்கியுள்ளது.

News March 26, 2024

அடுத்தவர் குடும்பத்தை தயவு செய்து கெடுக்க வேண்டாம்

image

புகழுக்காகவும் பணத்திற்காகவும் அடுத்தவர் குடும்பத்தைப் பற்றி பேச வேண்டாம் என மதுரை முத்துவின் மனைவி நீத்து தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு திரைப் பிரபலங்களின் வாழ்விலும் சொல்ல முடியாத பல பிரச்னைகள் உண்டு. நானும், முத்துவும் சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் கலையை ரசியுங்கள். எங்கள் வீட்டு ஜன்னலை எட்டி பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார். முன்னதாக நீத்துவை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி இருந்தனர்.

News March 26, 2024

தோனி மீதான அன்பை கண்டு வியந்த ரச்சின்

image

தோனி மீதான ரசிகர்களின் அன்பு தன்னை வியக்கச் செய்வதாக சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எப்போதெல்லாம் தோனி மைதானத்திற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று ஆர்ப்பரிக்கிறார்கள். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. பல நேரங்களில் இதை நினைத்து வியப்படைகிறேன். தோனி மீது மக்கள் வைத்துள்ள அன்பு தனித்துவமானது” என்று தெரிவித்தார்.

News March 26, 2024

சிறையில் இருந்து கெஜ்ரிவால் உத்தரவு

image

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய உத்தரவில், டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபடுமாறும், மொஹல்லா மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 26, 2024

CSKvsGT: ரசிகர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு

image

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள், தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். அதேபோல், மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!