India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைக்க 8வது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. 2014ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, 2026ம் ஆண்டு 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

சூப்பர் ஓவரை தன்னை நம்பி கொடுத்த கேப்டன் சூர்யகுமாருக்கு வாஷிங்டன் சுந்தர் நன்றி தெரிவித்துள்ளார். கடின உழைப்பும், கடவுளின் ஆசிர்வாதமும் தன்னை சிறப்பாக செயல்பட செய்ததாகக் கூறிய அவர், சூப்பர் ஓவர் வீசும் நேரத்தில் அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் என்றார். இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், சூப்பர் ஓவர் வீசிய அவர், 2 ரன்களில் இலங்கையை ஆட்டமிழக்க செய்தார்.

ஆந்திரா, பிஹாருக்கான நிதி ஒதுக்கீடு வீழ்ச்சியடைந்த வங்கியின் பின்தேதியிட்ட காசோலை என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இந்த 2 மாநிலங்களுக்கும் மோடி நிச்சயமில்லாத வாக்குறுதிகள் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், தெளிவான வாக்குறுதி இல்லாமல் மேலும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 2 மாநிலங்களுக்குமான நிதி ஒதுக்கீடு பல கோடியை கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சாலையோரம் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் நோக்கில் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றுதான், சிவப்பு கோடு கொண்ட முக்கோணத்திற்குள் வெள்ளை நிற பின்னணியில் 4 கரும்பு புள்ளிகளை கொண்ட போர்டு. இதற்கு என்ன அர்த்தம் என பார்க்கலாம். அப்பகுதி கண் பார்வையற்றோர் நடமாட்டம் இருக்கும் இடம். ஆதலால், அப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடாது. எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெரியசாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட அந்த அணிக்கு சரீத் அசலங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். தாெடக்க ஆட்டக்காரர் நிஷாந்த் மாதுஸ்கா அணியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். பதிரனாவும் நீண்ட நாள்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இருஅணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர் வரும் 2ஆம் தேதி தொடங்குகிறது.

INDIA கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ராகுல் தொடர்ந்து கூறி வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், பலமுறை அறிவுறுத்தியும் அதே தவறை மீண்டும் செய்வதாக விமர்சித்துள்ளார். இந்திய மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் கருத்தை கூறாமல், அரசியல் செய்ய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் நோக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆதலால் உடனே கணக்கு தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இல்லையேல் நாளை முதல் ₹5,000 அபராதத்துடன் (ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கும் கீழ் இருப்போருக்கு ₹1,000 அபராதம்) தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

OLYMPICS பதக்கப் பட்டியலில் நேற்று பிரான்ஸ் 2, சீனா 3ஆவது இடங்களில் இருந்தன. இந்நிலையில், இன்று பிரான்ஸ் 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு சீனா 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் (7 தங்கம் உள்பட 13 பதக்கங்கள்) முதலிடத்திலும், சீனா (6 தங்கம் உள்பட 14 பதக்கம்) 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா (6 தங்கம் உள்பட 11 பதக்கம்) 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா (2 வெண்கலம்) 33ஆவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.