News July 31, 2024

Olympics 2024: 7 மாத கர்ப்பத்துடன் வாள் வீசிய வீராங்கனை

image

எகிப்து வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ் 7 மாத கர்ப்பத்துடன், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர்,” களத்தில் 2 பேர் இருந்ததாக நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், மற்றொன்று எதிரணி வீராங்கனை, மூன்றாவது இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டி குழந்தை” என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

News July 31, 2024

வெள்ளி விலை ஒரே நாளில் ₹2000 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹91,000க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட் நாளான ஜூலை 23ஆம் தேதி ₹92,500ஆக இருந்த கிலோ வெள்ளி விலை மெல்ல குறைந்து நேற்று ₹ 89,000க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ₹2000 அதிகரித்துள்ளது.

News July 31, 2024

மோடி உடனான சந்திப்பை ரத்துசெய்தாரா ஸ்டாலின்?

image

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால்
நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லும்போது, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் பட்ஜெட்டில் தமிழகம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால், அதையும் ஸ்டாலின் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக எதிர்ப்பு நிலையை தொடர்ந்து கடைபிடிக்க அவர்
முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

News July 31, 2024

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

கடந்த சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து, ஒரு சவரன் ₹51,360க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ஒரு கிராம் ₹6,420க்கும் விற்பனையாகிறது. இதனால், விரைவில் சவரன் விலை ₹51,000க்கு கீழ் செல்லும் என எதிர்பார்த்து காத்திருந்த நடுத்தர மக்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

News July 31, 2024

ஆம்ஸ்ட்ராங் கேங்ஸ்டரா? ஆனந்தன் மறுப்பு

image

ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞராக இருந்ததால் அவரை தேடி வழக்குத் தொடர்பாக வருவோருக்கு உதவியுள்ளதாகவும், அதனால் அவரை கேங்ஸ்டர் எனக் கூறுவது தவறு என்று பிஎஸ்பி மாநில புதியத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தலித் தலைவராக மட்டுமல்லாது, அனைத்து சமூகத் தலைவராகவும் ஆம்ஸ்ட்ராங் வளர்ந்து வந்ததாகவும், இதை ஏற்க முடியாதோர், ரவுடிகளை ஒருங்கிணைத்து அவரை படுகொலை செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News July 31, 2024

1,500 வங்கி பணியிடங்கள்: இன்றே கடைசி

image

இந்தியன் வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 1,500 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, indianbank.in என்ற இணையத்தளத்தில், விண்ணப்ப கட்டணமாக ₹500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

News July 31, 2024

விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்

image

வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை அவர் சென்றார். அப்போது, மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

News July 31, 2024

T20: மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

image

இந்திய அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் டி20 போட்டியில் அதிகமுறை தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. அந்த அணி இதுவரை 105 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் 104, வெஸ்ட் இண்டீஸ் 101, ஜிம்பாப்வே, நியூசிலாந்து தலா 99 தோல்விகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவிடம் இலங்கை அணி நேற்று சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.

News July 31, 2024

ஈரானில் ஹமாஸ் தலைவர் கொலை

image

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டிருப்பது மத்திய கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக அவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த இஸ்மாயில், அவரது பாதுகாவலர் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு இஸ்ரேலே காரணமென்றும் ஹமாஸ் கூறியுள்ளது.

News July 31, 2024

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முறை

image

ITR கணக்கு தாக்கல் செய்ய <>https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login <<>> என்ற தளம் சென்று பான் எண், கடவுச்சொல், கேப்ட்சா உள்ளிட்டு நுழைய வேண்டும். பின்னர் E-file பகுதிக்கு சென்று, Income Tax Return மற்றும் ITR-1 அல்லது ITR-2, Form 16 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிவத்தையும், நிதியாண்டையும் தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிந்து தாக்கல் செய்யலாம்.

error: Content is protected !!