India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க ஏதுவாக, வங்கி விவரங்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது. ACCOUNT NO:67319948232, State Bank Of India, city Branch, Thiruvananthapuram; IFSC: SBIN0070028 -இல் பண உதவி செய்யலாம். மேலும், உதவிப்பொருட்கள் வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் முக்கியம் என்பதை உணர்ந்து, இந்த செய்தியை ஷேர் செய்யுங்க.

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பாலகிருஷ்ணா, 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக 1974இல் அறிமுகமானார். இதையடுத்து, ஹீரோவாக பல வெற்றிப் படங்களை அவர் கொடுத்துள்ளார். இந்தாண்டுடன் அவர் திரைத்துறைக்கு வந்து, 50 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 109 படங்களில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். அதில் 129 கதாநாயகிகள், அவருடன் சேர்ந்து நடித்துள்ளனர். அதிகபட்சம் அவரின் படம் ரூ.250 கோடி வரை வசூலித்துள்ளது.

ஆடிப்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என 3 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஆடி 18 அன்று, பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். அதனால்தான் இந்த நாள்களில் தாலி மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகளை செய்யும் பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை மீண்டும் விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த சம்பவத்தை, அப்போதைய சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு அனுப்பினார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடைவிதித்தார். தற்போது அவரது உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக விரைவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், கோலி 116 ரன்கள் எடுத்தால் 27 ஆயிரம் ரன்களை எட்டிய 4ஆவது சர்வதேச வீரர்
என்ற சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக, சச்சின், சங்ககாரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட மூவர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். தற்போது வரை கோலி, டெஸ்ட், ஒருநாள், T20 என 530 போட்டிகளில் விளையாடி 26,884 ரன்கள் எடுத்துள்ளார்.

கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள 17,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பகுதியும் நிலச்சரிவு அபாயம் கொண்டதென பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய பிரபல புவி அறிவியல் ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி ஜி.சங்கர், 17,000 சதுர கி.மீ. பகுதியை விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இதுபோல பிற நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமென்றார்.

நிலச்சரிவு, இயற்கை பேரிடர் என்பதால் அதனைத் தடுக்க முடியாது, ஆனால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என காலநிலை ஆய்வாளர் ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், நிலச்சரிவு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு மதமாற்ற தடைச்சட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதனைக் கண்டித்து நடந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக திருமா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்ததால், யுபிஎஸ்சி தலைவர் பொறுப்பில் இருந்து மனோஜ் சோனி விலகிய நிலையில், அவருக்கு பதில் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத்துறை இணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில், இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். தற்போது வரை அங்கு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நேற்று அதிகாலை நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.