News July 31, 2024

அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

image

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News July 31, 2024

காணாமல் போனோர் பற்றிய தகவல் தெரிவிக்க எண்

image

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றிய தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. வயநாடு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, காணாமல் போனோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் பற்றி தகவல் தெரிவிக்கலாம். அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 170ஐ கடந்துள்ளது.

News July 31, 2024

19ஆவது ஓவரை ரிங்கு வீசியது ஏன்? சூர்யகுமார் பதில்

image

ரிங்கு சிங் வலைப்பயிற்சியின்போது, சிறப்பாக பந்து வீசியதால், இலங்கைக்கு எதிரான போட்டியில்
பந்துவீச கூறியதாக, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். 20ஆவது ஓவரை விட, 19ஆவது வீசுவது என்பது கூடுதல் அழுத்தமாக இருக்கும் என்ற அவர், ரிங்குவின் திறமை மீது இருந்த நம்பிக்கையால் அவரிடம் அந்த பொறுப்பை வழங்கியதாகவும் கூறினார். இந்த போட்டியில் ரிங்கு சிங் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

News July 31, 2024

6 கோடி பேர் வருமான வரித்தாக்கல்

image

வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை 6 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், ITR தாக்கல் செய்தவர்களில் 70% பேர் புதிய வரி முறையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ITR தாக்கல் செய்யாதவர்கள் உடனே தாக்கல் செய்யவும், இல்லையெனில் நாளை (ஆக.1) முதல் ₹5,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும்,
வரித்தொகைக்கு வட்டியும் செலுத்த நேரிடும்.

News July 31, 2024

ஜெய்ஸ்வாலை புகழ்ந்த ராபின் உத்தப்பா

image

கில், ஜெய்ஸ்வால் ஆகியோரை பார்க்கும்போது சச்சின் மற்றும் கங்குலி விளையாடுவதை போல் உள்ளதாக, முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால், அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்ற அவர், உலகின் எந்த ஒரு மைதானத்திலும் அவரால் ரன்களை குவிக்க முடியும் என்றார். ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் சிறப்பாக
ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

News July 31, 2024

தமிழக அரசு பாகுபாடு பார்க்காது: முதல்வர்

image

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் தமிழக அரசு சமமாக பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித்தொகுதி
என பாகுபாடு பார்த்து, அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தாது என்ற அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொகுதிக்கு 10 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார். எதிர்க்கட்சி வென்ற தொகுதிகளில், கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News July 31, 2024

#Olympics பி.வி.சிந்து வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் குரூப் போட்டியில், எஸ்தோனியாவின் கிறிஸ்டின் கூபாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21 -5, 21- 10 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

News July 31, 2024

இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை

image

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் வானிலை மையம் விடுவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவையில் 12 முதல் 20 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

News July 31, 2024

ஓபிஎஸ்சிடம் நிர்வாகிகள் குமுறல்?

image

சென்னையில் அண்மையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பண்ருட்டி ராமசந்திரனே வரவில்லையாம். இதனால், அங்கு வந்த சிலரை மட்டும் வைத்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது நிர்வாகிகள் மனதிலுள்ள ஆதங்கத்தை குமுறி தள்ளியதாகவும், பதிலளிக்க முடியாத ஓபிஎஸ் சமாளித்து அனுப்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

News July 31, 2024

‘வேட்டையன்’ ரிலீஸ் எப்போது?

image

ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்.30ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!